ஜார்ஜ் பிடெல் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் பிடெல் ஏரி
George Biddell Airy
1891 இல் ஏரி
பிறப்பு(1801-07-27)27 சூலை 1801
ஆல்னிக், நோர்தம்பர்லாந்து, இங்கிலாந்து
இறப்பு2 சனவரி 1892(1892-01-02) (அகவை 90)
கிரேனிச்சு, இலண்டன்
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல், கணிதம்
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அரசு கழகம்
கல்வி கற்ற இடங்கள்திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
Academic advisorsஜார்ச் பீக்கொக்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்பியர்சு மோர்ட்டன்
அறியப்படுவதுஅரச வானியலாளர்
விருதுகள்சுமித் பரிசு (1823)
ஆல்பர்ட் பதக்கம் (1876)
அரசு பதக்கம் (1845)
இலாலண்டே பரிசு (1834)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்
கோப்ளே பதக்கம் (1831)

சர் ஜார்ஜ் பிடெல் ஏரி (Sir George Biddell Airy, 27 சூலை 1801 – 2 சனவரி 1892) ஓர் ஆங்கிலேய கணிதவியலரும், வானியலாளரும் ஆவார்.

ஜார்ஜ் ஏரி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு வரித் தண்டலர். இவர் கொல்சேச்டெர் பள்ளியில் பயின்றார்.[1] பிறகு 1819இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1826இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியரானார். 1835 இல் இருந்து அரச வானியலாராக 46 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு இங்கிலாந்து அரசக் கழகம் கோப்லே விருதையும் அரசக் கழக விருதையும் (சர்) வழங்கியது. 1827முதல் 1883 வரை இவர் அக்கழகத்தின் தலைவராகவும் விளங்கினார்.

ஏரி கேம்பிரிட்ஜ் வான்காணகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது மேம்படுத்தப்பட்ட வான்கோளக் கிடைவரை நோக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நோக்கீடுகளை உரிய அளவுகோலில் அடக்கி பதிப்பிக்கும் முறையை உருவாக்கினார்.

1847இல் நிலா நோக்கீடுகளுக்கான வானுச்சித் தொடுவரை (altazymuth) கருவியை நிறுவினார். 1859இல் 33செ.மீ. புவி நடுவரை தொலைநோக்கியையும் புதிய சுழலியக்க வட்டத்தையும் (new transit circle) அமைத்தார். மேலும் 1838இல் காந்த, வானிலையியல் என்ற புதிய துறை ஒன்றையும் தோற்றுவித்தார்.[2][3] சூரியக் கரும்புள்ளிகளுக்கான அன்றாடப் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்தினார்.

இவர் அமெரிக்கா, கனடா நட்டெல்லையை வகுத்தார். ஒரிகான், கடலோரப் பகுதி எல்லையையும் வகுத்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

ஜார்ஜ் பிடெல் ஏரியும் ஓவியர் ஜான் காலியரும், 1883)

ஏரி பேரழகியான இரிச்சர்டா இசுமித்தை(1804–1875), டெர்பிழ்சயருக்கு நடைப்பயணம் போகும்போது சந்தித்துள்ளார். இதைப்பற்ரி பிறகு வர் எழுதினார், "கண்ணொடு கண் நோக்கின ... அதில் விதி பிணைந்து விட்டது ... நான் நாங்கள் கட்டாயம் இணையவேண்டும் என உணர்ந்தேன்," . இருநாள் கழித்து வர் தன் காதலை வெளியிட்டுள்ளார். இரிச்சர்டாவின் தந்தை ஏரி தன் மகளை மணக்கப் போதுமான செல்வ வளம் உள்ளவரல்ல எனக் கருதியுள்ளார். ஏரி 1830 இல் கேம்பிரிட்ஜ் பதவி பெற்றதும் இரிச்சர்டவை மணக்கும் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.[4][5][6]

இவர்கள் ஒன்பது குழந்தைகளைப் பெற்றனர். ஒன்பது குழந்தைகளில் மூவர் இளமையிலேயே இறந்துவிட்டனர். பிழைத்தவரில் மூத்த மகன் வில்ஃபிரிட் ஏரி ஒருபொறியாளர்; நெச்டானில் இருந்த கலோனல் ஜார்ஜ் டாம்லைனின் ஆர்வெல் பார்க் வான்காணகத்தின் வடிவமைப்பாளர்]].[7][8] Wilfrid's daughter was the artist Anna Airy.[8]

இவர்களின் மகன் ஃஊபர்ட் ஏரி (1838-1903) ஒரு மருத்துவர். இவர் ஒற்றைத் தலைவலி ஆய்வின் முன்னோடி.[9]

இவர்களின் பெரிய மகள் ஃஇல்டா (1840–1916), 1864 இல் எட்வார்டு உரூத்தை மண்ந்தார்.[10] Airy was knighted on 17 June 1872.[11]

இவர்1881 இல் ஓய்வு பெற்றதும் கிரீன்விச்சூக்கு அருகில் உள்ள குரூம்சு ஃஇல்லில் தன் திருமணமாகிய மகள்களுடன் வாழ்ந்தார். இவர் 1891 இல் கீழே விழுந்து உள்காயம் அடைந்துள்ளார். இதற்காக அறுவை மேற்கொண்ட பிறகு சில நாட்களே உயிர்தரித்துள்ளார். இறப்பின்போது அவரது சொத்து மதிப்பு £27,713. ஏரியும் அவர் மனைவியும் இறந்த குழந்தைகளும்சுஃபோக்கில் உள்ளபிளேஃபோர்டு மேரி திருச்சவையில் அடக்கம் ச்ய்யப்பட்டுள்ளனர்.[4] A cottage owned by Airy still stands, adjacent to the church and now in private hands.[12]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • ஏழாண்டுகளுக்கு நான்கு முறை இவர் அரசு வானியல் கழகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் (1835–37, 1849–51, 1853–55, 1863-64). (பிரான்சிசு பெய்லியைத் தவிர வேறு எவரும் நான்கு முறை தலைவரானதில்லை).[13]
  • அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நாட்டுத் தகைமை உறுப்பினர்(1832).[14]
  • செவ்வாய்க் குழிப்பள்ளம் ஒன்று இவர் பெயரால் ஏரி செவ்வாய்க் குழிப்பள்ளம் என வழங்குகிறது.[15] Within that crater lies another smaller crater called Airy-0 whose location defines the prime meridian of that planet, as does the location of Airy's 1850 telescope for Earth.[16]
  • இவர் பிரான்சு அறிவியல் கல்விக்கழகத்தின் வானியலுக்கான இலாலண்டே பரிசை வென்றவர், 1834
  • நிலாக் குழிப்பள்ளம் ஒன்றும் இவர் பெயரில் ஏரி குழிப்பள்ளம் என வழங்குகிறது.[17]
  • ஏரி அலைக் கோட்பாடு என்பது கடல் மேற்பரப்பு ஈர்ப்பு அலைகளுக்கான நேரியல் கோட்பாடு ஆகும் இது பாய்ம மேற்பரப்புகளுக்கும் பொருந்தும்.[18]
  • ஏரி சார்புகள் Ai(x), Bi(x) ஆகியவையும் அவை உருவாகும் வகைக்கெழுச் சமன்பாடும் இவர் பெயர்ரல் வழங்குகின்றன. மேலும் ஏரி வட்டும் ஏரி புள்ளிகளும் இவரது பெயரால் வழங்குகின்றன.

நூல்தொகை[தொகு]

ஏரி நூல்கள்
  • Popular Astronomy: A Series of Lectures Delivered at Ipswich (Full text at Popular Astronomy.)

A complete list of Airy's 518 printed papers is in Airy (1896). Among the most important are:

  • Airy, G. B. (1826) Mathematical Tracts on Physical Astronomy;
  • (1828) On the Lunar Theory, The Figure of the Earth, Precession and Nutation, and Calculus of Variations, to which, in the second edition of 1828, were added tracts on the Planetary Theory and the Undulatory Theory of Light;
  • (1839) Experiments on Iron-built Ships, instituted for the purpose of discovering a correction for the deviation of the Compass produced-by the Iron of the Ships; and
  • (1861) On the Algebraic and Numerical Theory of Errors of Observations and the Combination of Observations.
ஏரி பற்றியவை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sir George Biddell Airy". Encyclopaedia Britannica. (1911). Cambridge: Cambridge University Press. இணையக் கணினி நூலக மையம் 70608430. அணுகப்பட்டது 29 June 2014. 
  2. "WGS84 and the Greenwich Meridian". Royal Observatory, Greenwich. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  3. "A Guide to Coordinate Systems" (PDF). Ordnance Survey. Archived from the original (PDF) on 4 April 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  4. 4.0 4.1 British Academy (2006). Airy "Sir George Biddell (1801–1892)". Oxford Dictionary of National Biography (Online ). Oxford; New York: Oxford University Press. இணையக் கணினி நூலக மையம்:56568095. http://www.oxforddnb.com/view/article/251 Airy. பார்த்த நாள்: 24 February 2008.  (subscription or UK public library membership required)
  5. Chapman, Allan (January 1998). "The Female Touch". Astronomy Now 12: 43–47. 
  6. Chapman, Allan (June 2003). "Porters, watchmen, and the crime of William Sayers: the non-scientific staff of the Royal Observatory, Greenwich, in Victorian times". Journal of Astronomical History and Heritage (James Cook University) 6 (1): 27. Bibcode: 2003JAHH....6...27C. 
  7. Goward, K.J. (2005). "G B Airy's Country Retreat". Institute of Astronomy. University of Cambridge. Archived from the original on 7 ஆகஸ்ட் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 September 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. 8.0 8.1 Goward, Kenneth J (2006). "Founding of Orwell Park Observatory". Institute of Astronomy. University of Cambridge. Archived from the original on 15 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 December 2007.
  9. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/20608346
  10. Fuller, A. T. (2004) "Routh, Edward John (1831–1907)", Oxford Dictionary of National Biography, Oxford University Press, accessed 9 September 2007 (subscription or UK public library membership required)
  11. "No. 23868". இலண்டன் கசெட். 18 June 1872.
  12. A description and images of Airy's Suffolk cottage and church are found in Goward (2005)
  13. "LIST OF PRESIDENTS AND DATES OF OFFICE". A brief history of the RAS. Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 10 September 2012.
  14. "Book of Members, 1780–2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 6 April 2011.
  15. "Mars Nomenclature: Crater, craters". Gazetteer of Planetary Nomenclature. USGS: Astrogeology Research Program. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007.
  16. Morton, Oliver (2002). Mapping Mars: Science, Imagination, and the Birth of a World. New York: Picador USA. பக். 22–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-24551-3. https://archive.org/details/mappingmarsscien00mort_0. 
  17. Cocks, E. E. & Cocks, J. C. (1995). Who's Who on the Moon: A Biographical Dictionary of Lunar Nomenclature. Tudor Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-936389-27-3. https://archive.org/details/isbn_9780936389271. 
  18. Holthuijsen, Leo H. (2007). Waves in oceanic and coastal waters. Cambridge: Cambridge University Press. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-86028-8. 

வெளி இணைப்புகள்[தொகு]

நினைவேந்தல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பிடெல்_ஏரி&oldid=3766524" இலிருந்து மீள்விக்கப்பட்டது