ஜமுனாபாரி ஆடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜமுனாபாரி ஆடு என்பது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ஓர் ஆட்டினம். இந்த ஆடு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. 1953-ஆம் ஆண்டு முதல் இந்தோனோசியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆட்டின் பெயர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜமுனா பார் என்று ஆற்றின் பெயரிலிருந்து உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது.
தோற்றம் [தொகு]
பொதுவாக ஜமுனாபாரி ஆடுகள் வெண்மை நிறத்திலும் கழுத்து, தலைப்பகுதிகளில் பழுப்பாகவும் இருக்கும். இவற்றின் மூக்கு கிளி போல் வளைந்திருக்கும். காதுகள் நீளமாகவும் தொங்கிக்கொண்டும் இருக்கும். இவற்றின் கால்களும் நீண்டவை.