ஜப்பானியக் காடை
| Japanese Quail | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Coturnix japonica Temminck & Schlegel, 1849 |
ஜப்பானியக் காடை , (Coturnix japonica ), கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஓர் காடை இனமாகும். இவை இடம்பெயரக்கூடிய பறவைகள் ஆகும். மஞ்சூரியா, தென் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனிக்காலங்களில் இவை தெற்கு ஜப்பான், கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்கின்றன. இவை புல்வெளிகள் மற்றும் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜப்பானியக் காடையின் இறகுகள் மஞ்சள் பழுப்புப் புள்ளிகளுடனும், கண்களின் மேற்புறம் வெள்ளைக் கோட்டுடனும் காணப்படுகிறது. முழு வளர்ச்சி பெற்ற காதல் 20 செ.மீ. நீளம் வரை இருக்கும். இவ்வினம், அதன் வாழ்விடங்களில், பரவலாகக் காணப்படுகின்றன.
பொருளடக்கம் |
ஜப்பானியக் காடைகளின் பயன்பாடு[தொகு]
ஜப்பானியக் காடைகள் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
ஜப்பானியக் காடை வளர்ப்பு பற்றிய பாடல்கள்[தொகு]
கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கண்ணூர் க்ரிஷி விஞ்ஞான கேந்திரம், ஜப்பானியக் காடை வளர்ப்பு பற்றிய பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் கொண்ட தொகுப்பினை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- BirdLife International (2004). Coturnix japonica. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 13 January 2007. Database entry includes justification for why this species is of least concern
- Lee, Woo-Shin; Tae-Hoe Koo, Jin-Young Park; translated by Desmond Allen (2000). A field guide to the birds of Korea. Seoul: LG Evergreen Foundation. ISBN 89-951415-0-6.
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Coturnix japonica தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |