ச. குருசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. குருசாமி (பிறப்பு: நவம்பர் 10 1950) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாமக்கல் மாவட்டம் குட்டாம்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய “நச்சினார்க்கினியர் உரைநெறி” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._குருசாமி&oldid=3614143" இலிருந்து மீள்விக்கப்பட்டது