சோ. சிவபாதசுந்தரம்
சோ. சிவபாதசுந்தரம் (பிறப்பு: ஆகத்து 15, 1914) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்துறையில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1914 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்தவர். 1930களில் குரும்பசிட்டி பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் ஆசிரியரானார். ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1941 ஆம் ஆண்டளவில் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார். South East Broadcasting Company இனால் சிபாரிசு செய்யப்பட்டு 1974 ஆம் ஆண்டு இலண்டனில் பிபிசியில் இணைந்து ஐந்தாண்டுகள் பணியாற்றினார். பிபிசி தமிழோசை எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர்.
சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
1947 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய சிவபாதசுந்தரம் இலங்கை வானொலியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது இனத்துவேசம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்[1]. இதனை அடுத்து இலங்கை வானொலியை விட்டு வெளியேறி லீவர் பிறதர்சு நிறுவனத்தில் விளம்பர இயக்குனராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார்.
[தொகு] இவரது நூல்கள்
- மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947)
- ஒலிபரப்புக்கலை (1954)
- கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் (1960)
- தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977)
- சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978)
[தொகு] மேற்கோள்கள்
- ↑ மாதகலான் யோகராஜா, தமிழ் வெகுஜன தொடர்பு பிதாமகர், ஒலிபரப்பு வாத்தியார், தமிழர் தகவல், பெப்ரவரி 2000