சோவா-ரிக்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோவா-ரிக்பா என்பது உலகின் மிகத் தொன்மையான, இன்றும் புழக்கத்தில் உள்ள மரபுவழி மருத்துவமுறைகளில் ஒன்றாகும். இது திபெத், மங்கோலியா, இந்தியாவின் இமயமலைப் பகுதிகள், பூடான், நேபாளம், முந்தைய சோவியத் ஒன்றியத்தின் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு & கஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங், ஹிமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல்-ஸ்பிதி பகுதிகளில் புழக்கத்தில் உள்ளது[1].

இம்மருத்துவமுறையின் வேர் திபெத்திய நாட்டு மருத்துவமே என்று கூறப்பட்டாலும் பெருமளவுக்கு இந்திய ஆயுர்வேத மருத்துவமுறையையும், பௌத்த தத்துவங்களையும், சில சீன தத்துவங்களையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு மருத்துவமுறையாகும்[2].

இம்மருத்துவ முறையினை மேற்கொள்ளும் பாரம்பரிய மருத்துவர்கள் 'ஆம்ச்சி' என்றழைக்கப்படுவதால் சோவா-ரிக்பா 'ஆம்ச்சி மருத்துவம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய ஒன்றிய அரசு செப்டம்பர் 2009-இல் இம்முறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது[3].

இந்திய ஒன்றிய அரசின் சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரப்படி, 01.04.2012 அன்றுள்ளபடி, இந்தியாவில் 108 சோவா-ரிக்பா மருந்தகங்கள் இருந்தன[4].

ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள மரபுவழித் தேர்ச்சியுள்ள ‘ஆம்ச்சி’யால் மேற்கொள்ளப்படுவதாகவே பெருமளவுக்கு இருந்தாலும் மெல்ல நவீனமயமாகிவருகிறது இம்முறை. இந்தியாவில் நான்கு நிறுவனங்கள் ஆறுவருட இளநிலை திபெத்திய மருத்துவமுறை பட்டப்படிப்பை வழங்கிவருகின்றன. அவையாவன[5]:

  • இந்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சகம் நடத்தும் பௌத்தவியல் நடுவண் ஆய்வு நிறுவனம், லே (ஜம்மு & கஷ்மீர்)
  • இந்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சகம் நடத்தும் திபெத்திய ஆய்வுகளுக்கான நடுவண் பல்கலைக்கழகம், சாரநாத் (உத்தரப் பிரதேசம்)
  • தலாய் லாமா அவர்கள் நடத்தும் திபெத்திய மருத்துவம் & சோதிடவியல் நிறுவனம், தர்மசாலா (ஹிமாச்சலப் பிரதேசம்)
  • சோக்போரி மருத்துவப் பயிலகம், டார்ஜீலிங் (மேற்கு வங்காளம்)

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. http://nopr.niscair.res.in/bitstream/123456789/9345/1/IJTK%203(2)%20212-218.pdf
  3. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=52535
  4. http://data.gov.in/catalog/state-wise-distribution-ayush-ayurveda-yoga-naturopathy-unani-siddha-sowa-rigpa-and#web_catalog_tabs_block_10
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவா-ரிக்பா&oldid=3556288" இலிருந்து மீள்விக்கப்பட்டது