சொர்க்கப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சொர்க்கப் பறவை
Bird-of-paradise
வில்சனின் சொர்க்கப் பறவை (Cicinnurus respublica)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: பசரின்
துணைவரிசை: பாடும்பறவை
குடும்பம்: பரடிசயிடே
விகோர்சு, 1825
மாறுபாடு

14 வகைகள், 41 இனங்கள்

சொர்க்கப் பறவை (birds-of-paradise) என்பது பசெரிபோம் வரிசையிலுள்ள "பரடிசயிடே" குடும்ப பறவையாகும். இவற்றின் பெரும்பான்மை நியூ கினி மற்றும் அதன் சூழலும், சிறிய அளவில் மலுக்கு தீவுகள் மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த 14 வகைகளில் நாற்பத்தியொரு இனங்கள் காணப்படுகின்றன.[1] இப்பறவைகள் அவற்றின் பால் ஈருருமை இனத்தின் ஆண் பறவைகளின் இறகு அமைப்பு, மிகவும் நீண்ட மற்றும் அலகு, செட்டை, வால் அல்லது தலை ஆகிய இடங்களிலிருக்கும் விரிவான இறகுகள் அமைப்பு ஆகியவற்றால் சிறப்பாக அறியப்பட்டவை. இவற்றில் பல மழைக்காடுகளை வசிப்பிடமாகக் கொண்டவை. இவற்றின் எல்லா இனங்களும் பழங்களை உணவாகவும், சிறியளவானவை கணுக்காலிகளையும் உண்ணும். சொர்க்கப் பறவைகள் பல வகையான இனப்பொருக்க முறைகளாக ஒருதுணை மணம் முதல் போட்டி வகை பலதுணை மணம் வரை கொண்டுள்ளன.

உசாத்துணை[தொகு]

  1. Gill, F & D Donsker (Eds). 2012. IOC World Bird Names (v 3.2). Available at http://www.worldbirdnames.org [Accessed 13 Jan 2013].
"http://ta.wikipedia.org/w/index.php?title=சொர்க்கப்_பறவை&oldid=1574190" இருந்து மீள்விக்கப்பட்டது