சொக்டோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொக்டோ மொழி முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்கரான சொக்டோ இனத்தவரின் சொந்த மொழி இதுவாகும். இம்மொழி இன்னொரு தொல்குடி அமெரிக்க மொழியான சிக்காசோவுக்கு மிகவும் நெருங்கியது ஆகும். சில மொழியியலாளர் இவ்விரு மொழிகளும் ஒரே மொழியின் இரண்டு வட்டார வழக்குகள் எனக் கருதுகின்றனர். எனினும் அண்மைக்கால ஆய்வுகளின் படி சொக்ட்டோ மொழி பேசுபவர்கள் சிக்காசோ மொழியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பதாகக் காட்டுகின்றன. சொக்ட்டோ மொழியில் "ர்" ஒலி இல்லை.

வட்டார வழக்குகள்[தொகு]

சொக்டோ மொழியில் மூன்று வட்டார வழக்குகள் இனங்காணப்பட்டுள்ளன. அவை:

  1. தென்கிழக்கு ஒக்லஹோமாவில் உள்ள சொக்ட்டோ தேசத்தில் பேசப்படும் மொழி.
  2. ஒக்லஹோமாவைச் சேர்ந்த மிசிசிப்பி சொக்டோ.
  3. மிசிசிப்பியின், பிலடெல்பியாவுக்கு அண்மையில் உள்ள மிசிசிப்பி சொக்டோ இந்தியக் குழு பேசும் மொழி.

என்பனவாகும். இவற்றுடன், புளோரிடாவிலுள்ள, தல்லஹாசி, லூசியானாவின் கோவாசாத்தி ஆகிய இடங்களிலும், டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய இடங்களிலும் குறைந்த அளவில் இம்மொழி பேசுவோர் காணப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்டோ_மொழி&oldid=1349797" இலிருந்து மீள்விக்கப்பட்டது