சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி
| சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி | |
|---|---|
| பிறப்பு | சூலை 4, 1968 |
| தேசியம் | அயர்லாந்து[1] |
| இனம் | பார்சி |
| கல்வி | BE , MS |
| படித்த கல்வி நிறுவனங்கள் | இம்பீரியல் கல்லூரி லண்டன், லண்டன் வணிகப் பள்ளி |
| பணி | டாட்டா சன்ஸ் நிறுவன துணைத் தலைவர் |
| பெற்றோர் | பாலோன்ஜி மிஸ்ட்ரி |
| வாழ்க்கைத் துணை | ரோஹிகா மிஸ்ட்ரி |
சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி (Cyrus Pallonji Mistry, பிறப்பு சூலை 4, 1968) அயர்லாந்தின் வணிகர் பாலோன்ஜி மிஸ்ட்ரியின் கடைசி மகனாவார். டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் தலைவராகக் கூடியவராகவும் நவம்பர் 23, 2011 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.[2] இந்த நிறுவனத்தை இந்தியரல்லாதோர் ஒருவர் இவ்வாறு தலைமையேற்க விருப்பது முதல் முறையாகும்.[1]. மிஸ்ட்ரி தற்போதைய தலைவர் ரத்தன் டாட்டாவின் கீழ் துணைத்தலைவராக ஓராண்டுக் காலம் பணிபுரிந்தபின் திசம்பர் 2012 முதல் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். [3]. இம்பீரியல் கல்லூரி, லண்டனிலிருந்து குடிசார் பொறியியலில் பட்டம்பெற்ற பின்னர் லண்டன் வணிகப் பள்ளியில் வணிக மேலாண்மையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். டாட்டா சன்ஸ் நிறுவனத்தைத் தவிர சபூர்ஜி பாலோன்ஜி அண்ட் கோ, போர்ப்ஸ் கோகக், அஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், யுனைடெட் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் மேலாண்மைக் குழுக்களில் இயக்குனராக உள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Cyrus Mistry: Avid golfer & foodie, avoids cocktail circuit". Economic Times (2011-11-24). பார்த்த நாள் 2011-11-24.
- ↑ [1]
- ↑ Cyrus Mistry takes over the position of chairman for Tata Sons in December 2012