சேவா இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேவா இனக்குழு நடு/தெற்கு ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த ஒரு மக்கள் இனம். இவர்கள் தம்மைச் சூழவுள்ள இனக்குழுக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். சிறப்பாக, தும்புக்கா இனக்குழுவுடனும், நிசெங்கா இனக்குழுவுடனும் இவர்களுக்கு நெருங்கிய உறவு உண்டு. வரலாற்று அடிப்படையில் பெம்பா இனக்குழுவினருடனும் இவர்களுக்கு உறவுண்டு. இவ்விரு இனத்தவரினதும் மூலம் காங்கோ சனநாயகக் குடியரசு ஆகும். நிசெங்கா, தும்புக்கா ஆகிய இன மக்களுடையத்தைப் போலவே சேவா இனக்குழுவினருடைய நிலப் பகுதிகளில் பெரும்பகுதி நிகோனி இனத்தவரின் செல்வாக்கின் கீழ் உள்ளது. சேவா என்னும் பெயருக்கு மாற்றாக நியஞ்சா என்னும் பெயரும் இவ்வினக் குழுவினருக்கு வழங்கி வருகிறது. இவர்கள் சிச்சேவா என்னும் மொழியைப் பேசுகிறார்கள். தும்புக்கா, செங்கா, நிசெங்கா மாங்காஞ்சா ஆகிய இன மக்களைப் போலவே சேவா இனக்குழுவினரும் பண்டைக்கால மராவி (மலாவி) மக்களில் எஞ்சிய பிரிவினர் ஆவர்.

சேவா இனத்தவரில் இரண்டு பெரிய குலங்கள் உள்ளன. அவை பிகிரி, பண்டா என்பன. பிகிரி குலத்தவர் அரசர்களுடனும், உயர் குடியினருடனும் தொடர்பு கொண்டவர்கள். பண்டா குலம் நோய் தீர்ப்போர், மத குருக்கள் போன்றோரை உள்ளடக்கியது.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவா_இனக்குழு&oldid=1355412" இலிருந்து மீள்விக்கப்பட்டது