சேரமான் பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க. வார்ப்புரு:Infobox royal styles

சேரமான் பெருமாள் (English: Cheraman Perumal; Malayalam:ചേരമാൻ പെരുമാൾ; Arabic: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .[1]

சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்[தொகு]

கடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது:

 1. மெக்கா (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
 2. கைலாசம் (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
 3. கபிலவஸ்து அல்லது லும்பினி அல்லது சாரநாத் போன்ற புத்த மத ஸ்தலங்கள்
 4. கேரளர்கள் முன்னின்று நடத்திய நலந்தா பல்கலைகழகம்[2]

ஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்கானும்வாறு:

 • க்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களை பெற்றெடுத்தனர்.[2]
 • எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.[2]
 • கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.[2]
 • இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், நிலவு பிரியும் நிகழ்வை கண்டு, மெக்கா பயணித்து முகமது நபி மேற்ப்பார்வையில் தாஜுதீன் (நம்பிக்கையின் மகுடம்) என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர். [2]
 • கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.[2]
 • கிறிஸ்த்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.[2]
 • அயிக்கற யஜமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர் .[2]
 • அரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகி, தென் இந்தியா முழுதும் சுந்தரருடன் கோயில்களுக்கு சென்றார். கடைசியாக கைலாயத்தில் சிவா பக்தன் ஆனதாக கருதப்படுகிறது.[3]
 • புத்த மதத்தை தழுவினார்.[2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. இந்த அரசப்பெயர் சில சமயம் ராஜசேகர வர்மன் மற்றும் ராம வர்மா குலசேகரன் அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், ஹெர்மன் குண்டேர்ட் என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), Kerala Pazhama: Gundert's Antiquity of Kerala.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 S.N., Sadasivan (Jan 2000), "Caste Invades Kerala" (in English), A Social History of India, APH Publishing, p. 303,304,305, ISBN 817648170X, http://books.google.co.in/books?id=Be3PCvzf-BYC&pg=PA306&dq=cheraman+perumal&hl=en&sa=X&ei=DnfFUd3tOcSHrQfWxoGgBQ&redir_esc=y#v=onepage&q=cheraman%20perumal&f=false 
 3. Wentworth, Blake(04-24-2013). "Bhakti Demands Biography: Crafting the Life of a Tamil Saint". {{{booktitle}}}.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சேரமான்_பெருமாள்&oldid=1646162" இருந்து மீள்விக்கப்பட்டது