சேதுபதி மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேதுபதி மேல்நிலைப் பள்ளி
அமைவிடம்
மதுரை, தமிழ் நாடு
தகவல்
பள்ளி மாவட்டம் மதுரை
ஆணையம் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்
தரங்கள் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
கல்வி முறை தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

சேதுபதி மேல்நிலைப் பள்ளி மதுரை மாநகராட்சிப் பகுதியில் வடக்கு வெளி வீதியில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றான இப்பள்ளி மதுரைக் கல்லூரி வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி மகாகவி சுப்பிரமணிய பாரதி பணியாற்றிய பெருமையுடையது. அவரது நினைவாக பள்ளி நுழைவாயிலில் அவருடைய சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.