கரிம வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேதன இரசாயனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கரிம வேதியியல் அல்லது சேதன இரசாயனம், (Organic Chemistry) என்பது வேதியியலின் ஒரு பகுதியாகும். இது கரிம (Carbon) அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகியவற்றால் ஆன வேதிப்பொருட்களின் அமைப்பு, இயல்புகள், வேதிவினைகள் பற்றிய இயல் ஆகும். நன்கு அறியப்பட்ட கரிமப் பொருள் மரக்கரி ஆகும். அச்சொல்லில் இருந்து கரிம வேதியியல் என்ற சொல் பாவனைக்கு[1] (பயன் பாட்டிற்கு) வந்துள்ளது.

காபனின்(கரிமம்) வலுவளவு நான்கு ஆகும். எனவே காபன் ஏனைய மூலகங்களிலும்(தனிமங்கள்) பார்க்க அதிக பிணைப்புக்களை உருவாக்க முடியும். மேலும் காபன் ஏனைய மூலகங்களுடன் சேர்ந்து உருவாக்கும் பிணைப்புக்களின் பிணைப்புச் சக்தியும் குறைவாகும்.[2]இதன் காரணமாக காபன் இயற்கையில் அதிக சேர்வைகளை உருவாக்குகிறது.

பொருளடக்கம்

பிரதான சேதனச் சேர்வைகள் [தொகு]

சேதனச் சேர்வைகள் பிரதானமாக இரண்டு வகைப்படும். அவையாவன:

  1. அலிபற்றிக் சேதனச் சேர்வைகள்
  2. அரோமற்றிக் சேதனச் சேர்வைகள் என்பனவாகும். மேலும் தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டு அவற்றை வகைப்படுத்தலாம்.

அலிபற்றிக்[3] சேதனச் சேர்வைகள் [தொகு]

நீண்ட சங்கிலியைக் கொண்ட சேதனச் சேர்வைகளாகும். இவை மேலும்,

  • அல்கேன்கள்
  • அல்கீன்கள்
  • அல்கைன்கள் எனப் பிரிக்கப்படுகின்றன.

அல்கேன்கள் [தொகு]

காபன் அணுக்களுக்கிடையில் ஒற்றைப் பிணைப்பை மாத்திரம் கொண்ட சேர்வைகள் அல்கேன்களாகும்.

அல்கீன்கள் [தொகு]

காபன் அணுக்களிடையே இரட்டைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கீன்களாகும்.

அல்கைன்கள் [தொகு]

காபன் அணுக்களிடையே மும்மைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கைன்களாகும்.

அரோமற்றிக்[4] சேதனச் சேர்வைகள் [தொகு]

பென்சீன் வளையத்தைக் கொண்ட சேதனச் சேர்வைகளாகும்

தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டு வகைப்படுத்தல் [தொகு]

தொழிற்பாட்டுக் கூட்டம் [தொகு]

சேதனச் சேர்வையொன்றின் விஷேட இயல்புகள் மற்றும் தாக்கங்களுக்குப் பொறுப்பான அணுக்கள் அல்லது அணுக்கூட்டங்கள் தொழிற்பாட்டுக் கூட்டங்கள் எனப்படும்.

சில பிரதான சேர்வைகள் [தொகு]

பின்வரும் அட்டவணை சில பிரதான சேதனச் சேர்வைகளின் விபரங்களைத் தருகிறது.

பெயர் கூட்டம் சூத்திரம் கட்டமைப்புச் சூத்திரம் முன்னொட்டு பின்னொட்டு உதாரணம்
அல்கேன் அல்கைல் RH Alkyl alkyl- -ane methane
எதேன்
அல்கீன் அல்கீனைல் R2C=CR2 Alkene alkenyl- -ene ethylene
எதிலீன்
(Ethene)
அல்கைன் அல்கைனல் RC≡CR' Alkyne alkynyl- -yne acetylene
அசெற்றலீன்
(Ethyne)
பென்சீன் பீனைல் RC6H5
RPh
Phenyl phenyl- -benzene Cumene
Cumene
(2-phenylpropane)
தொலுயீன் பென்சைல் RCH2C6H5
RBn
Benzyl benzyl- 1-(substituent)toluene Benzyl bromide
Benzyl bromide
(α-Bromotoluene)
ஹலோஅல்கேன் ஹலோ RX Halide group halo- alkyl halide Chloroethane
Chloroethane
(Ethyl chloride)
ஃபுளோரோஅல்கேன் ஃபுளோரோ RF Fluoro group fluoro- alkyl fluoride Fluoromethane
Fluoromethane
(Methyl fluoride)
குளோரோஅல்கேன் குளோரோ RCl Chloro group chloro- alkyl chloride Chloromethane
Chloromethane
(Methyl chloride)
புரோமோஅல்கேன் புரோமோ RBr Bromo group bromo- alkyl bromide Bromomethane
Bromomethane
(Methyl bromide)
அயடோஅல்கேன் அயடோ RI Iodo group iodo- alkyl iodide Iodomethane
Iodomethane
(Methyl iodide)
அல்ககோல் ஹைட்ரொக்ஸில் ROH Hydroxyl hydroxy- -ol methanol
மெதனோல்
கீட்டோன் காபனைல் RCOR' Ketone -oyl- (-COR')
or
oxo- (=O)
-one Butanone
Butanone
(Methyl ethyl ketone)
அல்டிகைட் அல்டிகைட் RCHO Aldehyde formyl- (-COH)
or
oxo- (=O)
-al acetaldehyde
Ethanal
(Acetaldehyde)
அசற்றைல் ஹேலைட் ஹலோஃபோர்மைல் RCOX Acyl halide carbonofluoridoyl-
carbonochloridoyl-
carbonobromidoyl-
carbonoiodidoyl-
-oyl halide Acetyl chloride
Acetyl chloride
(Ethanoyl chloride)

அறிவியல் சொற்கள் [தொகு]

அடிக்குறிப்புகள் [தொகு]

  1. பாவனை என்ற சொல் பயன்பாடு என்ற பொருளில் இலங்கைத் தமிழர் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. பொதுவாகப் பாவனை என்பது ஒன்றைப் பார்த்து அதுபோலச் செய்தல் என்ற பொருளைக் கொடுக்கும். (எ-கா: கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து .....). எனினும், இலங்கையில் பயன்பாடு என்னும் பொருளில் இச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. (பாவனையாளர், பாவனைப் பொருட்கள் இன்னும் பல).
  2. 1. C - H = 413kJmol-1 2. C - C = 340kJmol-1 3. C = C = 615kJmol-1
  3. ”கொழுப்புத் தன்மை” எனும் கருத்தில் பெயரிடப்பட்டது.
  4. ”இனிய மணமுடையன” எனும் கருத்தில் பெயரிடப்பட்டது.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கரிம_வேதியியல்&oldid=1415463" இருந்து மீள்விக்கப்பட்டது