சேகனாப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேகனாப் புலவர் என்பவர் 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர் ஆவார். செய்கு அப்துல்காதிர் நெயினார் லெப்பை என்ற பெயரின் சுருக்கமே சேகனாப் புலவர் ஆகும். காயல் பட்டினத்தைச் சேர்ந்த இரத்தின வியாபாரியின் மகனான இவர் இளமையில் அறிவுக் குறையுடையவராய் இருந்ததாகவும் ஒருநாள் கருநாகம் ஒன்று இவரது நாவைத் தீண்டியது என்றும் அதுமுதல் இவர் கவிபுனையும் ஆற்றல் பெற்றதாகவும் கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஞானியரான குணங்குடி மஸ்தான் சாகிபு இவரது பள்ளித் தோழராவார். இவர் தனது பரம்பரைத் தொழிலையும் விடாது பாடல் இயற்றி பெருஞ்சிறப்பு பெற்றார். இவர் தமிழுக்கு பெருங்காப்பியங்களை இயற்றித் தந்துள்ளார்.

படைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • தமிழிலக்கிய வரலாறு , ஜனகா பதிப்பகம்- 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகனாப்_புலவர்&oldid=912022" இலிருந்து மீள்விக்கப்பட்டது