செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம்
| செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடத் திட்டம் Mars Science Laboratory mission |
|
|---|---|
| அமைப்பு: | நாசா |
| முதன்மை ஒப்பந்தக்காரர்: | போயிங் லொக்ஹீட் மார்ட்டின் |
| திட்ட வகை: | தளவுளவி |
| ஏவப்பட்ட நாள்: | நவம்பர் 26, 2011 15:02:00.211 UTC[1][2][3] |
| ஏவுகலம்: | அட்லஸ் 5 541]] (AV-028) |
| திட்டக் காலம்: | 686 பூமி நாட்கள் |
| தே.வி.அ.த.மை எண்: | MARSCILAB |
| இணைய பக்கம்: | செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் |
| நிறை: | 900 கிகி[4] |
| திறன்: | கதிரியக்க ஐசோடோப்பு வெப்பமின்னாக்கி (RTG) |
| edit | |
செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் (Mars Science Laboratory, MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவி ஆகும். இவ்விண்கலத்துக்கு "கியூரியோசிட்டி" (Curiosity) எனவும் பெயரிடப்பட்டுள்ளது[5][6] The MSL was launched November 26, 2011 at 10:02 am EST[2][3]. இத்தரையுளவி 2011 நவம்பர் 26 ஆம் நாள் புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ்-5 என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. செவ்வாயில் கேல் பள்ளம் என்ற பகுதியில் 2012 ஆகத்து 6 முதல் ஆகத்து 20 வரையான காலப்பகுதியில் இது தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது[7]. இப்பள்ளத்தின் உள்ளே 5 கிமீ உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன[8].
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] மேற்கோள்கள்
- ↑ https://twitter.com/#!/NASAKennedy/status/140468905964609536 Official liftoff time, NASA KSC
- ↑ 2.0 2.1 NASA - Mars Science Laboratory, the Next Mars Rover
- ↑ 3.0 3.1 Allard Beutel (19 November 2011). "NASA's Mars Science Laboratory Launch Rescheduled for Nov. 26". NASA. பார்த்த நாள் 21 November 2011.
- ↑ Rover Fast Facts
- ↑ "Name NASA's Next Mars Rover". NASA/JPL (2009-05-27). பார்த்த நாள் 2009-05-27.
- ↑ "NASA Selects Student's Entry as New Mars Rover Name". NASA/JPL (2009-05-27). பார்த்த நாள் 2009-05-27.
- ↑ "NASA's Shuttle and Rocket Launch Schedule". NASA (2010-10-27). பார்த்த நாள் 2010-09-02.
- ↑ "Mars Science Laboratory: Mission". NASA/JPL. பார்த்த நாள் 2010-03-12.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் |
- MSL Home Page
- MSL - Actual Launch (10:02 am EST/usa, November 26, 2011 - Recorded Video (04:00)
- MSL - Mission Summary - Animated/Extended Video (11:20)
- MSL - Entry, Descent & Landing (EDL) - Animated Video (02:00)
- MSL - Gale Crater Landing Site - Animated/Narrated Video (02:37)
- MSL - NASA/JPL News Channel Videos
- MSL - NASA/JPL Virtual Tour - Rover
- MSL - Construction - Recorded Video
- Send Your Name To Mars
- MSL - Demo, reported by The Planetary Society.
- MSL - Entry, Descent & Landing (EDL) - Description. (PDF)
- ChemCam Mounted with LIBS for Classifying Carbonate Minerals on Mars (PDF)
- MSL Press Kit