செவிலியர் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செவிலியர் பயிற்சிக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மனிதர்களுக்கான உடல் நலத்தில் நோய்கள் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவக்கூடிய கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் செவிலியர் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள செவிலியர் கல்லூரிகள்[தொகு]

தமிழ்நாட்டில் செவிலியர் கல்விக்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அரசுக் கல்லூரிகள்[தொகு]

  1. செவிலியர் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.
  2. செவிலியர் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை.
  3. செவிலியர் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சென்னை.

சுயநிதிக் கல்லூரிகள்[தொகு]

தமிழ்நாட்டில் செவிலியர் கல்விக்கான 125 சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இளநிலைப் பட்டப்படிப்புகள்[தொகு]

செவிலியர் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் இரு வகையாக உள்ளன.

  • இளம் அறிவியல் (செவிலியர்- பொது)- அரசுக்கல்லூரிகள் 3 மற்றும் 125 சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளது.
  • இளம் அறிவியல் (பயிற்சி பெற்ற செவிலியருக்கானது)- அரசுக்கல்லூரி 1 மற்றும் 31 சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளது.

முதுநிலைப் பட்டப்படிப்புகள்[தொகு]

செவிலியர் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகள் அரசுக்கல்லூரி 1 மற்றும் 37 சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளது. இந்தப் பட்டப்படிப்புகள் பாடங்கள் மற்றும் இடங்கள் ஆகியவை கல்லூரிகளுக்கேற்ப மாறுபடுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செவிலியர்_கல்லூரிகள்&oldid=1369846" இருந்து மீள்விக்கப்பட்டது