செளராட்டிரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குசராத்தில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் குடியேறிய செளராட்டிரத்தை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சௌராட்டிர மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் இம்மொழிக்கு இங்கு எழுத்து வடிவம் இல்லை.

பொருளடக்கம்

[தொகு] வசிப்பிடம்

தமிழ்நாட்டில் சௌராட்டிரர்கள் பெரும்பான்மையாக மதுரையில் வசிக்கின்றார்கள். இருப்பினும் திண்டுக்கல், பரமக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், சென்னை, கோயம்புத்தூர், பெரியகுளம், திருபுவனம் போன்ற ஊர்களிலும் ஓரளவு இந்த சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெசவுத் தொழிலைத்தான் அதிக அளவில் மேற்கொள்கின்றார்கள். இவர்களைப் பட்டுநூல்காரர் என்றும் இவர்கள் மொழியை பட்டுநூலி அல்லது காட்ரி என்றும் அழைக்கின்றனர்[1].

[தொகு] மக்கள்தொகை

1997 ஆம் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 510,000 சௌராட்டிரர்கள் வாழ்கிறார்கள். இவ்வினத்தவர்களைப் பற்றி எ.சே. சாண்டர்சு (A.J. Saunders) என்பார் 1927 இல் எழுதி இருக்கின்றார்[2].

[தொகு] திருபுவனம் கோயில்

திருபுவனத்தில் தம் வழிபாட்டிற்காக ஒரு பெருமாள் கோயில் கட்டினர். இது கோதண்டராமசுவாமி என்றறியப்படுகின்றது. தமிழகத்திலேயே சௌராட்டிரா சமூக மக்களின் செயலாட்சியின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும். சௌராட்டிரா சமூகத்தைச் சார்ந்த சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்த பூசனை (வழிபாட்டு) மடமும் உள்ளது. சௌராட்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர் நாடகம் நடத்தப்படுகிறது. சௌராட்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

[தொகு] ஆரியங்காவு கோயில்

கேரளாவிலுள்ள ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயிலில் மார்கழி மாதத் திருவிழாவின் போது சௌராட்டிர சாதியினருக்குத் தனி மரியாதை அளிக்கப்படுகிறது.அதாவது இங்குள்ள தர்மசாஸ்தாவிற்கு சௌராட்டிரப் பெண்ணை திருமணம் முடிக்கும் நிகழ்வாக ஒரு விழா உள்ளது. இதன்படி "ஆரியங்காவு தேவஸ்தான சௌராட்டிர மகாஜன சங்கத்தினர்" இங்கு பெண் வீட்டார் என்கிற முறையில் திருமணத்திற்கு வேண்டிய பொருட்களோடு வந்து ஓரிடத்தில் தங்கி திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். பிள்ளை வீட்டார் செய்ய வேண்டிய மரியாதைகளை மறக்காமல், முதல் நாள் பாண்டிய அரசன் பணமுடிப்பு அளிக்கும் சடங்கையும் தேவஸ்தானத்தார் நிறைவேற்றி வைக்கின்றனர். அன்று சௌராட்டிரர்கள் குடும்பத்தோடு மணப்பெண்ணைத் திருமணத்திற்கு அழைத்து வரும் பாவனையில் அருகிலுள்ள மாம்பழத் துறைக்குச் சென்று அங்குள்ள பகவதியையும் வணங்கி வருகின்றனர்." [3]

[தொகு] அரசியல் பங்களிப்பு

சௌராட்டிரா சமூகத்தைச் சார்ந்தவர்களில் கீழ்கண்டவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர்.

  • எசு. ஆர். இராதா - முன்னாள் அமைச்சர்
  • ஏ.சி.எசு. ராம்பாபு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  • லட்சுமணன் - முன்னாள் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர்
  • ஏ.ஆர். ராமசாமி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

[தொகு] திரைப்படப் பங்களிப்பு

சௌராட்டிரா சமூகத்தைச் சார்ந்தவர்களில் கீழ்கண்டவர்கள் திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர்.

[தொகு] சௌராட்டிரா சமூகக் கல்வி நிறுவனங்கள்

சௌராட்டிரா சமுதாயத்தின் / சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நிர்வாகத்திலுள்ள சில கல்வி நிறுவனங்கள்.

[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Gazetter of the Madura District (Madras, 1914), I, 74, 110.
  2. "The Sourashtra Community in Madura, South India", Albert James Saunders, The American Journal of Sociology, Vol. 32, No. 5 (Mar. 1927) PP. 787-799, published by: The University of Chicago Press.
  3. பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் நூலின் பக்கம்-95

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=செளராட்டிரர்&oldid=823963" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி