செர்கீ ஐசென்ஸ்டைன்
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
| செர்கீ மிக்கைலவிச் ஐசென்ஸ்டைன் | |
|---|---|
| பிறப்பு | ஜனவரி 23, 1898 ரீகா, லாத்வியா |
| இறப்பு | பெப்ரவரி 11 1948 (அகவை 50) மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் |
| நடிப்புக் காலம் | 1923-1946 |
| துணைவர் | பேரா ஆத்தாஷெவா (1934-1948) |
செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein ரஷ்ய மொழி: Сергей Михайлович Эйзенштейн, செர்கேய் மிக்கைலவிச் ஐசன்ஸ்டைன், ஜனவரி 23, 1898 – பெப்ரவரி 11, 1948) ஒரு புரட்சிகர சோவியத் ரஷ்ய திரைப்பட இயக்குனரும், திரைப்படக் கோட்பாட்டாளரும் ஆவார். பேசாப் படங்களான ஸ்டிரைக் (Strike), பட்டில்சிப் போட்டெம்கின் (Battleship Potemkin), அக்டோபர் (October) ஆகிய படங்களும், சரித்திரப் படங்களான அலெக்சாண்டர் நெவ்ஸ்கி, இவான் த டெரிபிள் போன்ற படங்களும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவரது ஆக்கங்கள், தொடக்ககாலப் படத்தயாரிப்பாளர்கள் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தின.