செயற்படாச் சொத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயல்படா சொத்துக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செயற்படாச் சொத்துக்கள் (Non-Performing Assets-NPA) என்பன நிதி நிறுவனம் வழங்கிய ஈட்டுக் கடன்கள் (Pledged Loans) அல்லது வெந்நிலை ஜாமீன் கடன்கள் (Non-Pledged Loans), குறித்த தவணைகளில் திரும்பி வராவிட்டால், தவணை தவறிய (Over due) கடன்கள் ஆகும். பொதுவாக வருவாய் ஈட்டாத கடன்களைச் செயல்படாத சொத்துக்கள் பட்டியலில் சேர்ப்பர். வெந்நிலை ஜாமீன் கடன்கள் (Unsecured Loans) 90 நாட்களுக்கு மேலும், ஈட்டுகடன்கள் 180 நாட்களுக்கு மேலும் தவணை தவறியிருந்தால் (Over due), அக்கடன்களைச் செயல்படாத சொத்துகள் என தணிக்கையாளர் (Auditor) மதிப்பிடுவர். [1] இவ்வகையான செயற்படாத சொத்துக்கள் மிக அதிகமாக கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களின் நிதிநிலைமை கேள்விக் குறியாகிவிடும்.

செயற்படாத சொத்துக்களின் வகைப்பாடு[தொகு]

வங்கிகள் மற்றும் நிதி நிதி நிறுவனங்கள் செயற்படாத சொத்துக்களை, தவணை தவறிய கடன்களின் காலத்தைப் பொருத்தும், திரும்ப வசூலிக்கும் தன்மை பொருத்தும் அடியிற்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.

  1. 12 மாதங்களுக்குள் தவணை தவறிய கடன்களை இரண்டாந் தரச் சொத்துக்கள் (Sub Standard Assests).
  2. 12 மாதங்களுக்கு மேற்பட்ட தவணை தவறிய கடன்களை சந்தேகச் சொத்துக்கள் (Doubtful Assets)
  3. தணிக்கையாளரால் வசூலாகாது எனக் குறிப்பிடும் கடன்களை நட்டச் சொத்துக்கள் (Loss Loans/Loss assets) என்பர்.[2]

ஒதுக்கீடுகள்[தொகு]

  1. நட்டச் சொத்துக்களுக்கு (Loss Loans/Loss Assets) முழு ஒதுக்கீடு (Full Reserve) செய்யப்படும்.
  2. இரண்டாந் தரச் சொத்துக்களுக்கு (Sub Standard Assets) 15% ஒதுக்கீடு (Bad Debt Reserve) ஏற்படுத்துவர்.

செயல்படா சொத்துக்களால் ஏற்படும் தீங்குகள்[தொகு]

  1. நிதி நிறுவனத்தின் இலாபம் குறையும்.
  2. மூலதனம் குறைவதுடன், நிதி நிறுவனம் வழங்கும் கடன்களின் வரம்பு குறையும்.
  3. தவணை தவறிய கடன் தொகைகளுக்கு நிகரான ஒதுக்கீடு (Loss Reserve) அதிகரிக்கும்.
  4. அரசு மற்றும் நடுவண் வங்கியின் விளக்கங்களுக்கு விடை கூறவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
  5. நிதி நிறுவன பங்குதாரர்களுக்கு உரிய பங்கு ஈவுத்தொகை (Dividend) வழங்க இயலாமல் போய்விடும்.
  6. பங்குச் சந்தையில் நிதி நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்துவிடும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்படாச்_சொத்துக்கள்&oldid=3246149" இலிருந்து மீள்விக்கப்பட்டது