செயந்திர சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள் வாக்கு கூறும்பொழுது

செயந்திர சரசுவதி' அல்லது ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் (பிறப்பு ஜூலை 18, 1935-சுப்ரமண்யம் மகாதேவ ஐயர்) 69 வது சங்காரச்சார்யர் (குரு) அ இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதி.

பொருளடக்கம்

[தொகு] இயற்பெயர்

சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியால் இளைய பீடாதிபதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். இவரை இளைய பீடாதிபதியாக மார்ச் 22, 1954, ல் அறிமுகம் செய்து வைத்தார். இப்போது இவரே இந்து சமயத்தின் முக்கிய பிரமுகராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.


[தொகு] சிறப்பு

இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையானுலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக அமெரிக்கா நாட்டில் வாழ்பவர்கள் பலர் காஞ்சி மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம் மடத்தின் நிதி வளம் பல கோடிகளை உள்ளடக்கியதாகக் கொண்டுள்ளதால் இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.

[தொகு] தடைச்சட்டம்

ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரை திருப்திப் படுத்துவதற்காக சில சட்டங்களையும் இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அச்சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.

[தொகு] கொலைவழக்கு

நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொடூரமாக கொலை செய்யப்பட்டக் காரணத்தால் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் பிணை ஆணையின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் நீதிமன்றம் இவரை பிணை விடுவிப்பு மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றம் இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

[தொகு] ஊடகங்களின் பரபரப்பு

கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் மிகவும் சுருசுருப்பாக இயங்கி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது. ஊடகங்களின் செயல்பாடுகளை ஆந்திர நீதிமன்றமும் கண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்