செமியோன் ரூதின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செமியோன் கெஸ்சலேவிச் ரூதின் (Semyon Gesselevich Rudin, ஜூலை 21, 1929-ஆகஸ்ட் 22, 1973) ஒரு சோவியத் மொழியியலாளரும், இந்தியவியலாளரும், தமிழறிஞருமாவார். தமிழ் முறைக்கேற்ப தனது பெயரை “செம்பியன்” என்று மாற்றிக் கொண்டவர். உருசிய-தமிழ், தமிழ்-உருசிய அகராதிகளை உருவாக்கியவர்களுள் ஒருவர்.

லெனின்கிராட் நகரில் பிறந்தவரான ரூதின் யூத இனத்தவர். லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். இந்தியவியலில் மேற்படிப்புச் சான்றிதழும் பெற்றார். 1955 இல் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். 1968 இல் முனைவர் பட்டம் பெற்று துணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், மராட்டி போன்ற இந்திய மொழிகளைக் கற்றறிந்தார். பேரா. ஏ. பியார்தியோஸ்கியும் ரூதினும் இணைந்து உருவாக்கிய தமிழ்-உருசிய அகராதி 1960 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஏறத்தாழ 46,000 சொற்கள் இடம்பெற்றிருந்தன. ரூதின் தமிழுக்காற்றிய தொண்டினைப் பாராட்டி, 1965 இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் அவருக்கு ஒரு பரிசையும் சிறப்புப் பதக்கத்தையும் வழங்கியது. 1968 இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் ரூதின் கலந்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செமியோன்_ரூதின்&oldid=3246089" இலிருந்து மீள்விக்கப்பட்டது