செமாராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செமாராங்
Official seal of செமாராங்
Seal
செமாராங் is located in Indonesia
செமாராங்
செமாராங்
இந்தோனேசியாவில் செமாராங் நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°58′0″S 110°25′0″E / 6.96667°S 110.41667°E / -6.96667; 110.41667ஆள்கூறுகள்: 6°58′0″S 110°25′0″E / 6.96667°S 110.41667°E / -6.96667; 110.41667
நாடு இந்தோனேசியா
மாகாணம் மத்திய சாவகம்
பரப்பு
 • மொத்தம் 225.17
மக்கள் (2003)
 • மொத்தம் 1
நேர வலயம் WIB (UTC+7)
Website www.semarang.go.id

செமாராங் நகரம் இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வட கரையில் அமைந்துள்ள ஒரு பெரு நகராகும். மத்திய சாவக மாகாணத்தின் தலை நகரான செமாராங் நகரின் பரப்பளவு 225.17 சதுர கிலோ மீற்றர் ஆகும். ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்நகரம் இந்தோனேசியாவின் ஐந்தாவது பெரிய நகரமாகும். இந்நகரின் அமைவிடம் 6°58′S 110°25′E / 6.967°S 110.417°E / -6.967; 110.417 ஆகும். நெதர்லாந்து காலனியாதிக்க காலத்திலிருந்து இன்று வரை இந்நகரம் இந்தோனேசியாவின் முக்கிய துறைமுக நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களையும் ஒருங்கே கொண்ட இந்நகரில் இந்தோனேசியச் சீனர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் செமாரங் நகரில் அமைந்திருந்த ஒரு சீன இல்லம்

நிருவாகம்[தொகு]

செமாராங் நகரம் 16 நிருவாக மாவட்டங்களாகவும் 177 உப-மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1906 வரையில் இந்நகரம் பூபதி (ஆளுநர்) ஒருவரின் கீழேயே இருந்து வந்தது. 1906 இன் பின்னர் நகரபிதா (மேயர்) ஒருவரின் கீழ் உள்ளது.


மொழி[தொகு]

இந்தோனேசியாவின் பல பாகங்களிலிருந்தும் இங்கு வந்து வசிப்போர் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடியோராயிருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக வாழும் சாவக மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் குறைவானதே. இங்குள்ள மக்கள் அநேகமாக சாவகம் அல்லது இந்தோனேசிய மொழியே பேசுகின்றனர். இங்கு அதிகமாக வாழும் சீனர்கள் ஹோக்கியன் அல்லது மாண்டரின் மொழியைப் பேசுகின்றனர்.


சகோதர நகரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=செமாராங்&oldid=1356898" இருந்து மீள்விக்கப்பட்டது