செப்டம்பர் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செப்டெம்பர் 18 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 261வது நாளாகும். நெட்டாண்டுகளில் 262வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 104 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 96 - டொமிஷியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து நேர்வா ரோமப் பேரரசன் ஆனான்.
- 1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.
- 1635 - புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பேர்டினண்ட் பிரான்ஸ் மீது போர் தொடுத்தான்.
- 1739 - பெல்கிரேட் நகரம் ஒட்டோமான் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
- 1759 - கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- 1809 - லண்டனில் ரோயல் ஒப்பரா மாளிகை திறக்கப்பட்டது.
- 1810 - சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.
- 1812 - மொஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெட்ரொவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.
- 1851 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
- 1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது புகழ்பெற்ற 'அட்லாண்டா மத்தியஸ்தம்’ என்ர சொற்பொழிவை ஆற்றினார்.
- 1906 - ஹொங்கொங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1911 - ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படைகள் ஜெர்மனியின் தென் மேற்கு ஆபிரிக்காவில் தரையிறங்கினர்.
- 1919 - நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1922 – உலக நாடுகள் அணியில் ஹங்கேரி இணைந்தது.
- 1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
- 1932 - நடிகை பெக் எண்ட்விசில் ஹாலிவுட் சின்னத்தின் "H" எழுத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- 1934 – சோவியத் ஒன்றியம் உலக நாடுகள் அணியில் இணைந்தது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: இக்னேசி மொஸ்கிக்கி தலைமையிலான போலந்து அரசினர் ருமேனியாவுக்கு தப்பினர்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சொபொபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் டச்சு, ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க்கைதிகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
- 1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
- 1960 - பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
- 1961 - ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
- 1962 - ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1964 - வியட்நாம் மக்கள் இராணுவம் தென் வியட்நாமினுள் நுழைந்தது.
- 1968 - இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1972 - இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
- 1974 - சூறாவளி ஹொண்டூராசைத் தாக்கியதில் 5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.
- 1976 - பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- 1977 - வொயேஜர் 1 பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
- 1980 - சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.
- 1982 - லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
- 1988 - பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.
- 1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.
- 1997 - 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2006 - கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2007 - மியான்மாரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1709 – சாமுவேல் ஜோன்சன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1784)
- 1819 - லியோன் ஃபோக்கோ, பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1868)
- 1905 – கிரெட்டா கார்போ, சுவீடிய நடிகை (இ. 1990)
- 1979 - வினய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள் [தொகு]
- 1180 - ஏழாம் லூயி, பிரான்சின் மன்னன் (பி. 1120)
- 1783 - லியோனார்டு ஆய்லர், சுவிற்சர்லாந்து கணிதவியல் அறிஞர் (பி. 1707)
- 1945 - இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
- 1961 - டாக் ஹமாஷெல்ட், சுவீடனைச் சேர்ந்த ஐநா பொதுச் செயலர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
- 1966 - வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
- 1967 - ஜோன் கொக்ரொஃப்ட், பிரித்தானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
- 1978 - ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், (பி. 1898)