செப்டம்பர் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செப்டெம்பர் 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 244வது நாளாகும். நெட்டாண்டுகளில் 245வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.
- 1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.
- 1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.
- 1897 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1902 – முதலாவது அறிவியல் புனை திரைப்படம் (A Trip to the Moon) பிரான்சில் திரையிடப்பட்டது.
- 1914 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1914 - கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.
- 1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1928 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.
- 1951 - ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டன.
- 1961 - எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்பவர் எதியோப்பியக் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
- 1969 - அல் கடாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1970 - ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
- 1972 - ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.
- 1979 - நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.
- 1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1983 - பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.
- 1984 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1985 - அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 1991 - உஸ்பெகிஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.
- 2004 - ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.
- 2007 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள்[தொகு]
- 1877 - அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)
- 1895 - செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)
- 1925 [ ராய் கிளாபர், அமெரிக்க இயற்பியலாளர்
- 1970 - பத்மா லட்சுமி, அமெரிக்க நடிகை
- 1980 - கரீனா கபூர், இந்திய நடிகை
இறப்புகள்[தொகு]
- 1557 - ஜாக் கார்ட்டியே, பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் (பி. 1491)
- 1961 - ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910
- 1980 - தனிநாயகம் அடிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தாபகர் (பி 1913)
சிறப்பு நாள்[தொகு]
- லிபியா - புரட்சி நாள் (1969)
- சிங்கப்பூர் - ஆசிரியர் நாள்
- சிலவாக்கியா - அரசமைப்பு நாள்
- உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991)