சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Chennai International Airport
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

ChennaiAirport.jpg
சென்னை வானூர்தி நிலையத்தை மேலிருந்து பார்க்கும் போது

IATA: MAAICAO: VOMM
MAA is located in இந்தியா
MAA
MAA
இந்தியாவில் சென்னை வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
உரிமையாளர் இந்திய அரசு
இயக்குனர் இந்திய வானூர்தி நிலைய ஆணையம்
சேவை புரிவது சென்னை மாநகர பரப்பு
அமைவிடம் திரிசூலம், சென்னை
உயரம் AMSL 52 அடி / 16 மீ
ஆள்கூறுகள் 12°58′56″N 80°9′49″E / 12.98222°N 80.16361°E / 12.98222; 80.16361ஆள்கூறுகள்: 12°58′56″N 80°9′49″E / 12.98222°N 80.16361°E / 12.98222; 80.16361
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
07/25 12,001 3,658 Asphalt
12/30 6,708 2,045 Asphalt/பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (Apr '10-Mar '11)
Passenger movements 12,049,679
Airfreight movements in tonnes 249,523
Aircraft movements 124,100
Source: DAFIF[1][2]
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது மீனம்பாக்கம் சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தெற்கே அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின்வழி பயணம் செய்துள்ளனர். மும்பையிற்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவின் தொடக்ககாலத்தில் உருவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் வானுர்தி (புஷ்மோத்) 1932 ஆம் ஆண்டு தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது இராணுவ பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு உள்நாட்டு வானுர்தி வாரியம் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது தற்போது சரக்கு போக்குவரத்து வானூர்திகள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் 1985 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய நிலையம் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று அண்ணா பன்னாட்டு முனையமாகும். இரண்டாவது காமராசர் உள்நாட்டு முனையமாகும்.

தனித்துவம்[தொகு]

இந்நிலையம் உலகத் தரத்திற்கான அனைத்து இலவச மற்றும் கட்டண வசதிகளை கொண்டது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையகம் அருகருகில் அமையப்பெற்று இரண்டும் (கநோபி ) இணைக்கப்பட்டது. எதிரில் அமையப்பெற்ற திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது. இது முதல் இடத்தை பல விஷயங்களில் பிடித்துள்ளது அவை:

  • ISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம்.
  • உள்நாட்டு முனையகத்தில் aerobridges எனப்படும் வானுர்தியுடன் இணைக்கும் பாலத்தை முதலில் பெற்ற நிலையம் இதுவே.
  • சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு வானூர்தி நிலையத்தில் காகித கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்திய முதல் வானுர்தி நிலையம்.
  • சிறந்த வானூர்தி நிலையம் - உள்நாட்டு முனையகம் என்ற விருதினை ஜனாதிபதியால் வழங்கப்பெற்றது.
  • சுகாதாரமான இலவச குடிநீரை இரு முனையங்களிலும் வழங்கிய முதல் நிலையம்.

போக்குவரத்து[தொகு]

இந்நிலையம் தேசிய நெடுஞ்சாலை NH45யை ஒட்டியே அமைந்துள்ளது. இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைய உள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நிலையத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்குவரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Airport information for VOMM at World Aero Data. Data current as of October 2006.Source: DAFIF.
  2. வார்ப்புரு:GCM

வெளியிணைப்புக்கள்[தொகு]