சென்னை புத்தகக் கண்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சென்னை புத்தகக் காட்சி (Chennai Book Fair அல்லது Madras Book Fair) சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் ஓரு நூல் கண்காட்சியாகும். இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப்புத்தாண்டு - பொங்கல் காலத்தில், திசம்பர் கடைசி வாரத்திலிருந்து சனவரி மூன்றாம் வாரத்திற்குள், பத்து நாட்கள் நடைபெறும்.[1] இக்கண்காட்சி சென்னையின் சென்னை சங்கமம், சென்னை இசைவிழா நிகழ்ச்சிகளை ஒட்டி நடத்தப்படும் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.[2]

குழந்தைகள் புத்தகத் திருவிழா

பங்கு கொள்ளும் பதிப்பகங்கள் [தொகு]

இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நூல் கண்காட்சிகளில் மிகப்பெரும் கண்காட்சிகளில் ஒன்றாக இக்கண்காட்சி விளங்குகிறது. நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்தும் பன்மொழிப் பதிப்பகங்களும், தமிழ்நாட்டின் முக்கியமான சில தமிழ்ப் பதிப்பகங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

பன்மொழிப் பதிப்பகங்கள் [தொகு]

இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் பன்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்களில் முக்கியமானவையாக உள்ளன.

  • ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக அச்சகம்
  • கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சகம்
  • புஸ்தக் மகால்
  • இக்கின்பாதம்சு
  • ஓரியண்ட் லாங்மேன்சு
  • மாக்மில்லன் பதிப்பகம்
  • டாடா-மெக்ராஹில்
  • இந்தியா புக் அவுசு
  • பிரிட்டிஷ் கௌன்சில்
  • த இந்து

தமிழ் பதிப்பகங்கள் [தொகு]

இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் தமிழ்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

  • த அல்லயன்சு
  • பாரி நிலையம்
  • சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
  • வானதி பதிப்பகம்
  • மணிவாசகர் பதிப்பகம்
  • பிரேமா பிரசுரம்
  • நர்மதா பதிப்பகம்
  • நக்கீரன் பதிப்பகம்
  • சுரா புக்சு
  • கவிதா பதிப்பகம்
  • உமா பதிப்பகம்
  • தமிழ் புத்தகாலயம்
  • பூங்கொடி பதிப்பகம்,
  • காலச்சுவடு
  • கிழக்கு பதிப்பகம்
  • உயிர்மை
  • பாரதி புத்தகாலயம்,
  • ஐந்திணை பதிப்பகம்
  • கண்ணதாசன் பதிப்பகம்
  • அருணோதயம்
  • பழனியப்பா பப்ளிகேசன்சு
  • சிறீ செண்பகா பதிப்பகம்
  • பெரியார் சுயமரியாதை
  • சிறீ இராமகிருட்டிணா மடம்,
  • இசுகான்
  • திருமகள் நிலையம்
  • தாமரை நூலகம்
  • யூனிவெர்சல் பப்ளிசர்சு
  • கபிலன் பதிப்பகம்

கண்காட்சிகள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

உசாத்துணைகள் [தொகு]

வெளியிணைப்புகள் [தொகு]