சென்னை நூலகம்
| சென்னை நூலகம் | |
|---|---|
| வெளியீட்டாளர் | கௌதம் இணைய சேவைகள் |
| வடிவமைப்பாளர் | கோ. சந்திரசேகரன் |
| வகை | இணையதளம் |
| வெளியீடுகள் | இலவச மின் நூல்கள் |
| தொடக்கம் | 15-09-2006 |
| நிறுவனம் | கௌதம் இணைய சேவைகள் |
| நகரம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| தொடர்பு முகவரி | கௌதம் இணைய சேவைகள் 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி சென்னை - 600 050, தமிழ்நாடு, இந்தியா |
| வலைப்பக்கம் | சென்னை நூலகம் |
சென்னை நூலகம் தமிழ் நூல்களை இலவசமாக வழங்கும் ஒரு தமிழ் இணையத்தளம் ஆகும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த தளம், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஒருங்குறியில் வாசிக்க வழங்குகின்றது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான பழந்தமிழ் நூல்கள் முதல் புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற அண்மைக்கால எழுத்தாளர்களின் நூற்கள் வரையாகப் பரந்தளவிலான நூல்கள் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. இத்தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ் படைப்பாளிகளின் நூல்களும் உள்ளன.
இத்தளம் செப்டம்பர் 15 2006ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கி நடத்தி வருபவர் கோ. சந்திரசேகரன். இத்தளம அரசு ஆதரவு பெற்றதல்ல. சந்திரசேகரனின் தனிபட்ட முயற்சியால் உருவானது. இத்தளம் கௌதம் இணைய சேவைகள் (Gowtham Web Services) நிறுவனத்தின் கீழ் உள்ள பதினான்கு இணையதளங்களில் ஒன்றாகும். இத்தளம் இது இந்நிறுவனத்தின் இரண்டாவது தளமாகும். முதல் தளமான சென்னைநெட்வொர்க்.காம் 2001ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சென்னைநூலகம்.காம் இணையதளம் ஆரம்பிக்கும் முன்னர் வரை தமிழ் நூல்கள் சென்னைநெட்வொர்க்.காம் இணையதளத்தில் தான் வெளியிடப்பட்டு வந்தன.
இலவச வெளியீடுகள் [தொகு]
- அனைத்து இலவச நூல்களின் பட்டியல்
- கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து நூல்கள்
- புதுமைப்பித்தனின் படைப்புகள் 108 சிறுகதைகள் 57 மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
- தீபம் ந.பார்த்தசாரதியின் படைப்புகள்
- பேரறிஞர் சி.என்.அண்ணாதுரையின் படைப்புகள்
- மு.வரதராசனாரின் படைப்புகள்
- ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
- பாரதியார் படைப்புகள்
- பாரதிதாசன் படைப்புகள்
- ரமணிசந்திரன் படைப்புகள்
- சு.சமுத்திரம் படைப்புகள்
- ஆசிரியர் சாவி படைப்புகள்