சென்னை அரசுப் பொது மருத்துவமனை
சென்னை அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இது சென்னை நடு தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
16 நவம்பர், 1664 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாருக்கு மருத்துவம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் 25 ஆண்டுகள் இருந்தது. படிப்படியாக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. ஆளுநர் சர் எலிஹு யேல் என்பவரால் 1690 ல் கோட்டையிலேயே வேறொரு இடம் ஒதுக்கப்பட்டு இடமாற்றப்பட்டது. ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது.
தற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார். பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த ஜெ. ஜெயலலிதா 2005ம் ஆண்டு திறந்து வைத்தார். இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.