செந்தமிழ்ச் செல்வி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செந்தமிழ்ச் செல்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செந்தமிழ்ச் செல்வி என்னும் இலக்கியத் திங்களிதழ் அல்லது மாதிகை [1925] ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது. இது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் துவக்கபட்டது.[1] இதன் ஆசிரியர் (2006) இரா. முத்துகுமாரசுவாமி. இவருக்கும் முன்னால் இவ்விதழை நிறுவியவரும் பல்லாண்டு ஆசிரியராகவும் இருந்தவர் வ. சுப்பையாப் பிள்ள அவர்கள். தேவநேயப் பாவாணர், மதுரை இரா. இளங்குமரன், க.ப. அறவாணன், இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், பி.எல் சாமி போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இவ்விதழில் எழுதிவந்துள்ளனர்.

குறிப்புகள்[தொகு]