செண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செண்டை வாசிக்கும் கலைஞர்கள்

செண்டை என்பது கேரள மாநிலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தோல் இசைக்கருவி. இக்கருவி கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது அங்கு செண்டே என்று அழைக்கப்படுகிறது.

இச்செண்டை கேரளத்தின் பெரும்பாலான இந்துத் திருவிழாக்களின் போது வாசிக்கப்படும். யட்சகானம் எனப்படும் கர்நாடகத்தின் புகழ்பெற்ற நாட்டியநாடகத்திலும் இக்கருவி வாசிக்கப்படுகிறது.

செண்டையில் உருட்டுச் செண்டை, வீக்குச் செண்டை, அச்சன் செண்டை ஆகிய வகைகள் உள்ளன.

கேரளாவின் திருச்சூர் பூரம்திருவிழாவில் கேரள மாநிலத்தில் உள்ள செண்டைக் கலைஞர்கள் ஒன்று கூடி இசைப்பர். [1]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=செண்டை&oldid=1727869" இருந்து மீள்விக்கப்பட்டது