பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செஞ்சிலுவைச் சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சின்னங்கள். இச் சின்னங்களிலிருந்தே இயக்கம் அதன் பெயரைப் பெற்றது.

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பு. இவ்வியக்கத்தில்; நாடு, இனம், மதம், வகுப்பு, அரசியல் கருத்து என்பவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல்; மனித உயிர்களையும், உடல் நலத்தையும் பாதுகாத்தல்; மனிதர்களுக்கு மதிப்பு அளித்தலை உறுதிப்படுத்துதல்; மனிதர்களின் துன்பங்களைத் தடுத்தலும் அவற்றை நீக்குதலும் ஆகிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு 97 மில்லியன் தன்னார்வலர்கள் உலகம் முழுதும் பணிபுரிகின்றனர்.

இவ்வியக்கம், பல தனித்தனியான அமைப்புக்களை உள்ளடக்கிய ஒன்றாகும். இவ்வமைப்புக்கள், பொது அடிப்படைக் கொள்கை, நோக்கம், சின்னம், சட்டவிதிகள், ஆட்சி உறுப்புக்கள் என்பவற்றால் ஒன்றிணைந்துள்ளன. இயக்கத்தின் பகுதிகளாவன:

இளம் செஞ்சிலுவைச் சங்கம் [தொகு]

கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி இளம் செஞ்சிலுவைக் குழு படம்

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை நோக்கத்தைக் கொண்டு வருவதற்காக இளம் செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கப்படுகிறது. பள்ளித் தலைமையாசிரியர் மேற்பார்வையில் செஞ்சிலுவைச் சங்கத்தில் ஈடுபாடுடைய பள்ளியாசிரியர் ஒருவரைக் கொண்டு இக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுக்களில் ஈடுபாடு கொண்ட பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]