செங்குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செங்குரங்கு
Toque Macaques.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முண்ணாணி
வகுப்பு முலையூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: Cercopithecidae
பேரினம்: Macaca
இனம்: M. sinica
இருசொற்பெயர்
Macaca sinica
(லின்னேயசு, 1771)
செங்குரங்குகளின் பரம்பல்

செங்குரங்கு (Macaca sinica) எனப்படுவது இலங்கைக்குத் தனிச்சிறப்பான ஒரு சிறு குரங்கினமாகும். சிங்களத்தில் இது ரிளவா (රිළවා) என அழைக்கப்படுகிறது. இதன் தலையில் தொப்பி போன்ற அமைப்பில் தலைமுடிகள் செறிந்து வடிவமைந்திருக்கும்.

கூட்டமாக வாழும் இவ்வினம் ஓரணியில் கிட்டத்தட்ட 20 தனியன்கள் வரை கொண்டிருக்கும். செங்குரங்குகளின் தலையும் உடலும் சேர்ந்து 35-55 செமீ வரையும், வாலின் நீளம் 40-60 செமீ வரையும் இருப்பதோடு 8.5 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும்.

செங்குரங்குகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்ந்த போதிலும் பண்பாட்டு முக்கோணப் பகுதியில் ஏராளமாகக் காணப்படும். நிறைய பௌத்த விகாரைகள் காணப்படும் அப்பகுதியில் இவை பெரிதும் வாழ்வதால், விகாரைக் குரங்கு என்றும் அழைக்கப்படுவதுண்டு.

செங்குரங்குகளில் இரண்டு துணையினங்கள் அறியப்பட்டுள்ளன. அவையாவன:

[தொகு] மேற்கோள்கள்

  1. Dittus, W., Watson, A. & Molur, S. (2008). Macaca sinica. 2008 சிவப்புப் பட்டியல். IUCN 2008. Retrieved on 4 January 2009.

[தொகு] வெளித் தொடுப்புகள்

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=செங்குரங்கு&oldid=1108735" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்