கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர்.
இளமைப் பருவம் [தொகு]
இச்சகோதரிகள் பிறந்த இடம் தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமம் ஆகும். இவர்களது தாய்-தந்தையர்: கர்ணம் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள். இவர்கள் சூலமங்கலம் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர்.
பாடல்கள் [தொகு]
இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. இவர்கள் பாடியுள்ள, கந்த சஷ்டி கவசம் (முருகக் கடவுளின் மீது இயற்றப்பட்டது) அனைத்து பக்தர்களாலும் விரும்பப்பட்ட ஒன்றாகும்.[1]
| பாடல் |
ஆல்பம் |
| கந்த சஷ்டி கவசம் |
கந்த சஷ்டி கவசம் ஆல்பம் |
| கந்த குரு கவசம் |
கந்த சஷ்டி கவசம் ஆல்பம் |
விருதுகள் [தொகு]
- முருக கானமிர்தம்
- குயில் இசை திலகம்
- இசையரசி
- நாதக்கனல்
- கலைமாமணி -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1982-1983.
மேற்கோள்கள் [தொகு]