சூரிய வெப்ப ஆற்றல்
சூரிய வெப்ப ஆற்றல் என்பது சூரிய ஒளியை பயன்படுத்தி வெப்ப ஆற்றலை உருவாக்கும் செயலாகும். இந்த செயலின்போது சூரிய ஒளி உறிஞ்சப்பட்டும் குவிக்கப்பட்டும் வெப்ப ஆற்றல் உருவாக்கப்படுகிறது. சூரிய வெப்ப ஆற்றல் பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. பொதுவாக சமையலுக்கும் மின் உற்பத்திக்கும் சூரிய வெப்ப ஆற்றல் பயன்படுகிறது.
சூரிய வெப்ப ஆற்றல் பயன்பாடு மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை குறைந்த, நடுத்தர, அல்லது உயர் வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றல் முறையாகும். குறைந்த வெப்பநிலை வகையில் தட்டை வடிவ சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி பயன்படுகிறது. இது நீச்சல் குளங்களை சூடேற்றப்பயன்படுகிறது. நடுத்தர வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி நீரை சூடேற்றவும் சமையலுக்கும் இந்த வகை பயன்படுகிறது. உயர் வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த வகையில் சூரிய கதிர்கள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
|
இந்தக் கட்டுரையில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது.. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை பல நாட்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். |