சூரியன் பண்பலை வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூரியன் எப்.எம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூரியன் எப். எம் சன் குழுமத்தினால் தமிழ்நாட்டில் இயக்கப்படும் பண்பலை வானொலி ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இக்குழுமம் ரெட் எப் எம் என்ற பெயரில் பண்பலை வானொலியை நடத்துகிறது.[1] இரண்டு வணிகப் பெயர்களிலும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரும் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக சன் குழுமம் இருக்கிறது.

ரெட் எப்.எம் 93.5 அலைவரிசையில் இயங்கும் வானொலி ஆகும். புனே, மும்பை, டெல்லி, கொல்கத்தா, இந்தூர், போபால், பெங்களூர், மைசூர், மங்களூர், அலகாபாத்து, வாரணாசி போன்ற நகரங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. முதலில் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபொழுது ஆங்கிலம் மற்றும் இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் முழு நேர இந்தி வானொலியாக மாற்றப்பட்டது. இந்த வானொலியின் 48 சதவித பங்குகளை சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இந்தியா டுடே நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். அஸ்ட்ரோ, என்.டி. டீ .வீ ஆகியோரும் இதன் பங்குதாரர்கள் ஆவர். ஆகஸ்ட் 14, 2009 ஆம் ஆண்டு சூரியன் எப். எம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின் ரெட் எப்.எம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 38 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. தமிழகத்தில் சூரியன் எப். எம் என்ற பெயரில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது. தமிழகத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 93.9 மெகாஹெர்ட்சு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 91.9 மெகாஹெர்ட்சு அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது.

வானொலி நிலையங்கள்[தொகு]

சூரியன் எப்.எம் 93.5, 91.3 & 93.9 மெகாஹெர்ட்சு
தமிழ்நாடு தமிழ் சென்னை திருச்சி கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி புதுச்சேரி சேலம் ஈரோடு வேலூர்

சான்றுகோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-28. பார்க்கப்பட்ட நாள் 2013-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியன்_பண்பலை_வானொலி&oldid=3681815" இலிருந்து மீள்விக்கப்பட்டது