ரசினிகாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூப்பர் ஸ்டார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஜினிகாந்த்
Rajinikanth during audio release of robot.jpg
31 ஜூலை 2010
இயற் பெயர் சிவாஜி ராவ் கைக்வாட்
பிறப்பு திசம்பர் 12, 1950 (1950-12-12) (அகவை 63)
இந்தியாவின் கொடி கர்நாடகா , இந்தியா
நடிப்புக் காலம் 1975-தற்போது
துணைவர் லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்[1] என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12, 1950), மராட்டியில்: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார்.[2] இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். [சான்று தேவை]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இளமை[தொகு]

ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

குடும்பம்[தொகு]

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார்.

திரைப்படத்துறை[தொகு]

திரைப்படங்களில்[தொகு]

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரசினிகாந்து, ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரசினிகாந்து நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரசினிகாந்து நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.

ரசினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 154 திரைப்படங்களில் ரசினிகாந்து நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு[தொகு]

ரசினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.அவர் நடித்த படத்தில் பாபா மிக மோசமான தோல்வியை தழுவியது

அரசியல் தொடர்பு[தொகு]

1990களில் ரசினிகாந்து நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை.2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரசினி 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார்.


புத்தகங்கள்[தொகு]

  • ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில் இவரது படங்களில் உள்ள 30 முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம்.[3] இப்புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
  • பாட்சாவும் நானும் எனும் நூலில் ரஜினியை சந்தித்தது முதல் ரஜினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
  • ரஜினி (நூல் இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான ரஜினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன

நடித்த திரைப்படங்கள்[தொகு]

# திரைப்படத்தின் பெயர் மொழி இயக்குநர் இசையமைப்பாளர் வெளியான தேதி
1 அபூர்வ ராகங்கள் தமிழ் கைலாசம் பாலசந்தர் ம. சு. விசுவநாதன் 18.08.1975
2 கதா சங்கமா கன்னடம் Puttanna Vijaya Basker 23.01.1976
3 அந்துலேனி கதா தெலுங்கு கைலாசம் பாலசந்தர் ம. சு. விசுவநாதன் 27.02.1976
4 மூன்று முடிச்சு தமிழ் கைலாசம் பாலசந்தர் ம. சு. விசுவநாதன் 22.10.1976
5 பாலு ஜீனு கன்னடம் Kunigal Naga Bhushanam Balan G.K.Venkatesh 10.12.1976
6 அவர்கள் தமிழ் கைலாசம் பாலசந்தர் ம. சு. விசுவநாதன் 25.02.1977
7 கவிக்குயில் தமிழ் Devaraj &Mohan இளையராஜா 29.07.1977
8 ரகுபதி ராகவன் ராஜாராம் தமிழ் Durai Sankar Ganesh 12.08.1977
9 சிலாக்கம்மா செப்பண்டி தெலுங்கு Eranki Sharma ம. சு. விசுவநாதன் 13.08.1977
10 புவனா ஒரு கேள்விக்க்குறி தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 02.09.1977
11 ஒண்டு ப்ரேமடா கதே கன்னடம் S.M.Joe Simon 02.09.1977
12 16 வயதினிலே தமிழ் Bharati Rajaa இளையராஜா 15.09.1977
13 சகோதர சவால் கன்னடம் K.S.R.Das Sathyam 16.09.1977
14 ஆடு புலி ஆட்டம் தமிழ் எஸ். பி. முத்துராமன் Vijaya Bhaskar 30.09.1977
15 காயத்ரி தமிழ் R.Pattabhiraman இளையராஜா 07.10.1977
16 குங்கும ரக்‌ஷே கன்னடம் S.K.A.Chari Vijaya Bhasker 14.10.1977
17 ஆறு புஷ்பங்கள் தமிழ் K.M.Balakrishnan ம. சு. விசுவநாதன் 10.11.1977
18 தொலிரேயி காலிசண்டி தெலுங்கு K.S.Rami Reddy Sathyam 17.11.1977
19 அம்மே கதா தெலுங்கு K.Raghavendra Rao Chakravarthy 18.11.1977
20 கலாட்டா சம்சாரா கன்னடம் C.V.Rajendran G.K.Venkatesh 02.12.1977
21 சங்கர் சலீம் சைமன் தமிழ் P.Madhavan ம. சு. விசுவநாதன் 10.02.1978
22 கில்லாடு கிட்டு கன்னடம் K.S.P.Das Mohan Kumar 03.03.1978
23 அண்ணாடாமுல சவால் தெலுங்கு K.S.R.Das Sathyam 03.03.1978
24 ஆயிரம் ஜென்மங்கள் தமிழ் Durai ம. சு. விசுவநாதன் 10.03.1978
25 Maathu Tappadamaga கன்னடம் Peketi Sivaram இளையராஜா 31.03.1978
26 மாங்குடி மைனர் தமிழ் V.C.Gunanathan சந்திரபோஸ் (இசையமைப்பாளர்) 02.06.1978
27 பைரவி தமிழ் M.Bhaskar இளையராஜா 02.06.1978
28 இளமை ஊஞ்சலாடுகிறது தமிழ் Sridhar இளையராஜா 09.06.1978
29 சதுரங்கம் தமிழ் Durai V.Kumar 30.06.1978
30 வணக்கத்துக்குரிய காதலியே தமிழ் Thirulokachander ம. சு. விசுவநாதன் 14.07.1978
31 Vayasu Pilic தெலுங்கு Sridhar இளையராஜா 04.08.1978
32 முள்ளும் மலரும் தமிழ் Mahendiran இளையராஜா 15.08.1978
33 இறைவன் கொடுத்த வரம் தமிழ் A.Bhimasingh ம. சு. விசுவநாதன் 22.09.1978
34 Thappida Thala கன்னடம் கைலாசம் பாலசந்தர் Vijayabasker 06.10.1978
35 தப்புத் தாளங்கள் தமிழ் கைலாசம் பாலசந்தர் Vijayabasker 30.10.1978
36 அவள் அப்படித்தான் தமிழ் C.Rudhriah இளையராஜா 30.10.1978
37 தாய் மீது சத்தியம் தமிழ் R.Thyagarajan Sankar Ganesh 30.10.1978
38 என் கேள்விக்கு என்ன பதில் தமிழ் P.Madhavan ம. சு. விசுவநாதன் 09.12.1978
39 ஜஸ்டிஸ் கோபிநாத் தமிழ் Yoganand K.S.viswanathan 16.12.1978
40 ப்ரியா தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 22.12.1978
41 ப்ரியா கன்னடம் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 12.01.1979
42 குப்பத்து ராஜா தமிழ் Ramanna ம. சு. விசுவநாதன் 12.01.1979
43 Iddaru Asadhyule தெலுங்கு K.S.R.Das Sathyam 25.01.1979
44 Allauddinum Albhutha Vilakkum மலையாளம் I.V.Sasi Devarajan 14.04.1979
45 நினைத்தாலே இனிக்கும் தமிழ் கைலாசம் பாலசந்தர் ம. சு. விசுவநாதன் 14.04.1979
46 Andhamaina Anubhavam தெலுங்கு கைலாசம் பாலசந்தர் ம. சு. விசுவநாதன் 19.04.1979
47 அலாவுதீனும் அற்புத விளக்கும் தமிழ் I.V.Sasi Devarajan 08.06.1979
48 தர்ம யுத்தம் தமிழ் R.C.Sakthi இளையராஜா 29.06.1979
49 நான் வாழவைப்பேன் தமிழ் D.Yoganand இளையராஜா 10.08.1979
50 Tiger தெலுங்கு N.Ramesh Sathyam 05.09.1979
51 ஆறிலிருந்து அறுபது வரை தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 14.09.1979
52 அன்னை ஓர் ஆலயம் தமிழ் R.Thyagarajan இளையராஜா 19.10.1979
53 Amma Evarikkaina Amma தெலுங்கு R.Thyagarajan இளையராஜா 08.11.1979
54 பில்லா தமிழ் R.Krishnamoorthy ம. சு. விசுவநாதன் 26.01.1980
55 Ram Robert Rahim தெலுங்கு Vijaya Nirmala Chakravarthy 31.05.1980
56 அன்புக்கு நான் அடிமை தமிழ் R.Thyagarajan இளையராஜா 04.06.1980
57 காளி தமிழ் I.V.Sasi இளையராஜா 03.07.1980
58 Mayadari Krishnudu தெலுங்கு R.Thyagarajan இளையராஜா 19.07.1980
59 நான் போட்ட சவால் தமிழ் Puratchidasan இளையராஜா 07.08.1980
60 ஜானி தமிழ் Mahendran இளையராஜா 15.08.1980
61 Kaali தெலுங்கு I.V.Sasi இளையராஜா 19.09.1980
62 எல்லாம் உன் கைராசி தமிழ் M.A.Thirumugam இளையராஜா 09.10.1980
63 பொல்லாதவன் தமிழ் V.Srinivasan ம. சு. விசுவநாதன் 06.11.1980
64 முரட்டுக் காளை தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 20.12.1980
65 தீ தமிழ் R.Krishnamoorthy ம. சு. விசுவநாதன் 26.01.1981
66 கழுகு தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 06.03.1981
67 தில்லுமுல்லு தமிழ் கைலாசம் பாலசந்தர் ம. சு. விசுவநாதன் 01.05.1981
68 கர்ஜனை தமிழ் C.V.Rajendran இளையராஜா 06.08.1981
69 Garjanam மலையாளம் C.V.Rajendran இளையராஜா 14.08.1981
70 நெற்றிக்கண் தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 15.08.1981
71 Garjane கன்னடம் V.C.Rajendran இளையராஜா 23.10.1981
72 ராணுவ வீரன் தமிழ் எஸ். பி. முத்துராமன் ம. சு. விசுவநாதன் 26.10.1981
73 போக்கிரி ராஜா தமிழ் எஸ். பி. முத்துராமன் ம. சு. விசுவநாதன் 14.01.1982
74 தனிக்காட்டு ராஜா தமிழ் V.C.Gohanathan இளையராஜா 12.03.1982
75 ரங்கா தமிழ் R.Thyagarajan Sankar Ganesh 14.04.1982
76 புதுக்கவிதை தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 11.06.1982
77 எங்கேயோ கேட்ட குரல் தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 14.08.1982
78 மூன்று முகம் தமிழ் A.Jagannathan Sankar Ganesh 01.10.1982
79 பாயும் புலி தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 14.01.1983
80 துடிக்கும் கரங்கள் தமிழ் Sridhar S.P.Bala. 04.03.1983
81 Andhaa Kaanoon இந்தி T.Rama Rao Lakmikant Pyarelal 07.04.1983
82 தாய் வீடு தமிழ் B.Thyagarajan Sankar Ganesh 14.04.1983
83 சிவப்பு சூரியன் தமிழ் V.Srinivasan ம. சு. விசுவநாதன் 27.05.1983
84 Jeet Hamaari இந்தி R.Thyagarajan பப்பி லஹரி 17.06.1983
85 அடுத்த வாரிசு தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 07.07.1983
86 தங்க மகன் தமிழ் A.Jagannathan இளையராஜா 04.11.1983
87 Meri Adaalat இந்தி A.T.Raghu பப்பி லஹரி 13.01.1984
88 நான் மகான் அல்ல தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 14.01.1984
89 தம்பிக்கு எந்த ஊரு தமிழ் Rajasekar இளையராஜா 20.04.1984
90 கை கொடுக்கும் கை தமிழ் Mahendran இளையராஜா 15.06.1984
91 Ethe Naasaval தெலுங்கு Puratshidasan இளையராஜா 15.06.1984
92 அன்புள்ள ரஜினிகாந்த் தமிழ் K.Natraj இளையராஜா 02.08.1984
93 Gangvaa இந்தி Rajasekar பப்பி லஹரி 14.09.1984
94 நல்லவனுக்கு நல்லவன் Tamal எஸ். பி. முத்துராமன் இளையராஜா 22.10.1984
95 John Jani Janardhan இந்தி T.Rama Rao Lakshmikant Pyarelal 26.10.1984
96 நான் சிவப்பு மனிதன் தமிழ் S.A.Chandrasekar இளையராஜா 12.04.1985
97 Mahaguru இந்தி S.S.Ravichandra பப்பி லஹரி 26.04.1985
98 உன் கண்ணில் நீர் வழிந்தால் தமிழ் Balumahendra இளையராஜா 20.06.1985
99 Wafadaar இந்தி Dasari Narayana Rao Bappi Lahri 01.09.1985
100 ஸ்ரீராகவேந்திரா தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 01.09.1985
101 Bewafai இந்தி R.Thyagaarrajan பப்பி லஹரி 20.09.1986
102 படிக்காதவன் தமிழ் Rajasekar இளையராஜா 11.11.1985
103 மிஸ்டர் பாரத் தமிழ் Sp.Muthuraman இளையராஜா 10.01.1986
104 நான் அடிமை இல்லை தமிழ் Dwarakish Vijay Anand 01.03.86
105 Jeevana Poratam தெலுங்கு Rajachandra Chakravarthy 10.04.1986
106 விடுதலை தமிழ் K.Vijayan சந்திரபோஸ் (இசையமைப்பாளர்) 11.04.1986
107 Bhagawann Dada இந்தி J.Om.Prakash 25.04.1986
108 Asli Naqli இந்தி Sudarsan Nag Lakshmikant Pyarelal 17.10.1986
109 Dosti Dhushman இந்தி T.RamaRao Lakshmikant Pyarelal 31.10.86
110 மாவீரன் தமிழ் Rajasekar இளையராஜா 01.11.1986
111 வேலைக்காரன் தமிழ் Sp.Muthuraman இளையராஜா 07.03.1987
112 Insaff Kaun Karega இந்தி Sudarsan Nag Lakshmikant Pyarelal 19.06.1987
113 ஊர்க்காவலன் தமிழ் Manobala Sankarganesh 04.09.1987
114 மனிதன் Taamil S.P Muthuraman சந்திரபோஸ் (இசையமைப்பாளர்) 21.10.1987
115 Uttar Dakshan இந்தி Prabhat Kanna Lakshmikant Pyarelal 13.11.1987
116 Tamacha இந்தி Ramesh Ahuja பப்பி லஹரி 26.02.1988
117 குரு சிஷ்யன் தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 13.04.1988
118 தர்மத்தின் தலைவன் தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 24.09.1988
119 BloodStone English Dwight Little இளையராஜா 07.10.1988
120 கொடி பறக்குது தமிழ் Bharathiraja Hamsaleka 08.11.1988
121 ராஜாதி ராஜா தமிழ் R.Sundar Rajan இளையராஜா 04.03.1989
122 சிவா தமிழ் Ammerjan இளையராஜா 05.05.1989
123 ராஜா சின்ன ரோஜா தமிழ் எஸ். பி. முத்துராமன் சந்திரபோஸ் (இசையமைப்பாளர்) 20.07.1989
124 மாப்பிள்ளை தமிழ் Rajasekar இளையராஜா 28.10.1989
125 Bhrashtachar இந்தி RameshSippy Lakshmikant Pyarilal 01.12.1989
126 Chaalbaaz இந்தி Pankaj Parashar Lakshmikant Pyarelal 08.12.1989
127 பணக்காரன் தமிழ் P.Vasu இளையராஜா 14.01.1990
128 அதிசய பிறவி தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 15.06.1990
129 தர்மதுரை தமிழ் Rajasekar இளையராஜா 14.01.1991
130 Hum இந்தி Kukul S. Anand Lakshmikant Pyarelal 01.02.1991
131 Farishtay இந்தி Anil Sharma Bappi Lahari 22.02.1991
132 Khoon Ka Karz இந்தி Mukul S. Anand Lakshmikant Pyarelal 01.03.1991
133 Phool Bane Angaray இந்தி K.C.Bokadia Bappi Lahari 12.07.1991
134 நாட்டுக்கு ஒரு நல்லவன் தமிழ் V.Ravichandran Hamselekha 02.10.1991
135 தளபதி தமிழ் Manirathnam இளையராஜா 05.11.1991
136 மன்னன் தமிழ் Vasu.P இளையராஜா 14.01.1992
137 Tyagi இந்தி K.C.Bokadia Bappi Lahari 29.05.1992
138 அண்ணாமலை தமிழ் Suresh Krishna Deva 27.06.1992
139 பாண்டியன் தமிழ் எஸ். பி. முத்துராமன் இளையராஜா 25.10.1992
140 Insaniyat Ke Devta இந்தி K.C.Bokadia Anand Miland 12.02.1993
141 எஜமான் தமிழ் R.V.Udhayakumar இளையராஜா 18.02.1993
142 உழைப்பாளி தமிழ் P.Vasu இளையராஜா 24.06.1993
143 வள்ளி தமிழ் K.Nataraj இளையராஜா 24.06.1993
144 வீரா தமிழ் Suresh Krishna இளையராஜா 14.04.1994
145 பாட்ஷா தமிழ் Suresh Krishna Deva 12.01.1995
146 Peddarayudu தெலுங்கு Raviraj P Koti 15.06.1995
147 Aatank Hi Aatank இந்தி Dilip Sankar Bappi Lahari 04.08.1995
148 முத்து தமிழ் K.S.Ravikumar ஏ. ஆர். ரகுமான் 23.10.1995
149 Bhagyadevta Bengali Raghu Ram Burman Brothers 23.12.1995
150 அருணாசலம் தமிழ் Sunder.C Deva 10.04.1997
151 படையப்பா தமிழ் Ravikumar.K.S ஏ. ஆர். ரகுமான் 10.04.1999
152 பாபா தமிழ் Suresh Krishna A.R.Rahman 15.08.2002
153 சந்திரமுகி தமிழ் P.Vasu Vithiyasagar 14.04.2005
154 சிவாஜி தமிழ் Shankar ஏ. ஆர். ரகுமான் 15.06.2007
155 குசேலன் தமிழ் P.Vasu G.V.Prakash Kumar 01.08.2008
156 எந்திரன் தமிழ் Shankar ஏ. ஆர். ரகுமான் 01.10.2010

விருதுகள்[தொகு]

நாட்டின் பெருமைக்குரிய பத்ம பூஷன் விருதினை 2000-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது.[4]

தமிழக அரசின் விருதுகள்[தொகு]

ரஜினிகாந்த் தமிழ்நாடு அரசின் இரண்டுவிருதுகளை பெற்றுள்ளார்:

  • 1984 ஆம் ஆண்டு கலைமாமணி விருது மற்றும்
  • 1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருது
1978 முள்ளும் மலரும் காளி தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1982 மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1984 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1994 முத்து முத்து,
எஜமான்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
1999 படையப்பா ஆறுபடையப்பன் தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
2005 சந்திரமுகி டாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்
தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
2007 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
பரிந்துரை—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2010 எந்திரன் டாக்டர். வசீகரன்,
சிட்டி
தமிழ் பரிந்துரை—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது

பிலிம்பேர் விருதுகள்[தொகு]

வருடம் படங்கள் வகை பலன்
1979 ஆறிலிருந்து அறுபது வரை] சிறந்த நடிகர் வெற்றி
1982 எங்கேயோ கேட்ட குரல் சிறந்த நடிகர் வெற்றி
1984 நல்லவனுக்கு நல்லவன் சிறந்த நடிகர் வெற்றி
1985 ்ரீராகவேந்திரா சிறந்த நடிகர் வெற்றி
1991 தளபதி] சிறந்த நடிகர் வெற்றி
1992 அண்ணாமலை சிறந்த நடிகர் வெற்றி
1993 வள்ளி சிறந்த கதாசிரியர் வெற்றி
1995 பாட்ஷா, முத்து சிறந்த நடிகர் வெற்றி

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wishing Rajani a haapy Birthday". Filmcircle.com (12 December 2013). பார்த்த நாள் 12 December 2013.
  2. Ethiraj, Gopal (14 December 2009). "Rajini is simple, stylish, spiritual, that explains his uniqueness". Asian Tribune. http://www.asiantribune.com/news/2009/12/14/sunday-celebrity-rajini-simple-stylish-spiritual-explains-his-uniqueness. பார்த்த நாள்: 14 December 2009. 
  3. http://www.thehindu.com/books/packing-a-punch/article1121012.ece
  4. http://web.archive.org/web/20070302144232/http://mha.nic.in/awar2000.htm
"http://ta.wikipedia.org/w/index.php?title=ரசினிகாந்து&oldid=1646694" இருந்து மீள்விக்கப்பட்டது