சூசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கேணல் சூசை என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் தில்லையம்பலம் சிவநேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளின் தற்போதைய தலைவராவார். இவர் அக்டோபர் 16,1963 [1] அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார்.1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடற்புலிகள் அமைப்பின் விசேட கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அச்சமயம் கடற்புலிகளின் தலைவராக பணியாறிய "கங்கை அமரன்" இலங்கைக் கடற்படையினருடனான சண்டையின் போது கொல்லப்பட்டதை அடுத்து தலைமைப் பொறுப்பு சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொட்டு அம்மானுடன் சூசையும் இன்று புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவராக விளங்குகின்றார். இவரை சர்வதேச காவல் துறை (இன்டர்போல்) "பயங்கரவாதி"யாக அறிவித்து பிடியாணையொன்றை விடுத்துள்ளது.[2]
சூசையின் மகன் அதிவேகப் படகு ஒன்றை வெள்ளோட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு விடுதலைப் புலி உறுப்பினருடன் வீரமரணமடைந்தார். [3]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ சூசையின் பிறப்பு
- ↑ சூசைக்கெதிரான இன்டர்போல் பிடியாணை
- ↑ வான்படை கண்ட முதற் தமிழன்தான் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் கேணல் சூசையில் உரை. புதினம் இணையத்தளம், அணுகப்பட்டது 13 அக்டோபர், 2007

