சூபியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூஃபிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் பரேய்லியில் உள்ள இமாம் அகமது ராசா கான் ஆலா ஹஸ்ரத் அவர்களது தர்கா

சூபியம் அல்லது சூபிசம் அல்லது தசவுஃப் என்பது இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம்[ஆதாரம் தேவை] எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூபிகள் என அழைக்கப்படுகின்றனர். எனினும் இம் மரபைச் சார்ந்த சிலர், இம் மரபின் நோக்கங்களை அடைந்தவர்களை மட்டுமே சூபிகள் எனவும் அந்நோக்கங்களை அடைய முயல்பவர்களை டெர்விசுகள் எனவும் அழைக்கின்றனர்.

சூபிகளின் வரலாறானது ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் ஆரம்பிக்கின்றது. இதற்கு Quran சான்று பகர்கின்றது[ஆதாரம் தேவை]. முதல் மனிதனான பாவா Adam அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ' ஆதமு ஸபிய்யுல்லாஹ்' என்று அழைக்கப்படுவதிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகின்றது.

சூபி அறிஞர்கள், சூபிசம் என்பதை, இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர். தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்[ஆதாரம் தேவை].

சில சூபிகள் அதன் தொடக்க காலகட்டங்களில் இறைவனை எப்போதும் நினைவில் கொள்ளுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவும், துறவு நிலையை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர். உமய்யா கலீபா காலத்தின் உலகியல் சார்ந்த போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் நடுவே சூபிகள் மிகப் பெரிய பங்களிப்புகளை[ஆதாரம் தேவை] செய்தனர். சூபி இயக்கங்கள் (தரீக்காக்கள்) உலகின் பல கண்டங்களுக்கும் பரவிக் காணப்படுகின்றன.


பொருளடக்கம்

சமகாலத்து சூபி அறிஞர்கள் [தொகு]

அரேபியத் தீபகற்பம் [தொகு]

அப்துல்லாஹ் பின் பய்யாஹ் (பி. 1935) – சவூதி அரேபியா

ஹபீப் அலி அல் ஜிப்ரி (பி. 1971) – யெமன்

ஹபீப் உமர் பின் ஹபீச் (பி. 1962) – யெமன்

முஹம்மத் அலவி அல் மாலிகி (1944–2004) – சவூதி அரேபியா

ஆபிரிக்கா [தொகு]

அப்துல் ஹாமித் கிஷ்க் (1933–1996) – எகிப்து

அப்துல் காதிர் ஸூபி (பி. 1930) – தென் ஆபிரிக்கா

ஜிப்ரீல் புவாத் ஹத்தாத் (பி. 1960) – லெபனான்

முஹம்மத் அல் யாகூபி (பி.. 1963) – சிரியா


முஹம்மத் இப்னு அல்ஹபீப் (1876–1972) – மொரோக்கோ

முஹம்மத் ஸெய்யித் தன்தாவி (1928–2010) – எகிப்து

நூஹ் ஹா மீம் கெல்லர் (பி 1954) – ஜோர்தான்

வஹ்பா துஹைலி (பி. 1932) – சிரியா

யூசுப் அன் நபானி (1849–1932) – பலஸ்தீன்

மேற்கு ஐரோப்பா [தொகு]

அப்துல்ஹகீம் முராத் (பி. 1960) – ஐக்கிய இராச்சியம்

பிரித்ஜொஃப் ஷொவ்ன் (1907–1998) – சுவிஸ்

முஹம்மத் இம்தாத் ஹுஸைன் பிர்ழதா (பி. 1946) – ஐக்கிய இராச்சியம்

கிழக்கு ஐரோப்பா'

ஜுஸைன் ஹில்மி இஷாக் (1911–2001) – துருக்கி

கிழக்கு ஆசியா [தொகு]

அப்துல் லதீப் சவ்தூரி புல்தாலி (1913–2008) – பங்களாதேஷ்

அஹமத் ரஸா கான் (பி. 1943) – இந்தியா

மெஹர் அலி ஷா (1859–1937) – இந்தியா

கமருஸ் ஸமான் அஸ்மி (பி. 1946) – இந்தியா

ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் (1909-1968) - இந்தியா

ஸெய்யித் அப்துல் ஹை பின் அப்துர் ரஹ்மான் முஹம்மத் கோயாத்தங்கள் ஹல்லாஜுல் மன்ஸூர் (1927-2005) - இந்தியா

ஸெய்யித் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (பி. 1941), அக்கரைப்பற்று- இலங்கை

தாஹிருல் காதிரி (பி. 1951) – பாகிஸ்தான்

கிழக்கு, மத்திய ஆசியா [தொகு]

முஹம்மத் அப்துல் அலீம் ஸித்தீக்கி (1892–1954) – சிங்கப்பூர்

முஹம்மத் மா ஜியான் (1906–1978) – சீனா

ஸெய்யித் முஹம்மத் நகீப் அல் அத்தாஸ் (பி. 1931) – மலேசியா

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

சித்தர்கள்#சித்தர்களும் சூஃபிகளும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சூபியம்&oldid=1353958" இருந்து மீள்விக்கப்பட்டது