சு-30 எம்கேஐ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சு 30 எம்கேஐ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சு-30எம்கேஐ
SU-30MKI-g4sp - edit 2(clipped).jpg
வகை பல்வகை தாக்குதல் வானூர்தி
தயாரிப்பாளர் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம்
வடிவமைப்பு சுகோய் நிறுவனம்
வெள்ளோட்டம் 1 சூலை 1997
அறிமுகப்படுத்தியது 27 செப்டம்பர் 2002
நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயனாளர் இந்திய வான்படை
தயாரிப்பு 2002–present
எண்ணிக்கை 120+
அலகின் செலவு US$34.94 மில்லியன்
முந்தைய வடிவம் சு 27

சு 30எம்கேஐ (Sukhoi Su-30MKI) என்பது சண்டை வானூர்தியாகும். இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து இந்திய வான்படைக்காக உருவாக்ககியது. இந்தியா 2000 ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து 140 சு 30 எம்கேஐ விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.

முதல் ரஷ்ய தயாரிப்பு சு 30 எம்கேஐ 2002 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது. முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சு 30எம்கேஐ 2004 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது. சூலை 2010 நிலவரப்படி 124 சு 30எம்கேஐ விமானங்களை இந்திய வான்படை இயக்கி வருகிறது. இந்திய வான்படை 280 சு 30எம்கேஐ விமானங்களை 2015 ஆம் ஆண்டுக்குள் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.

உருவாக்கம் [தொகு]

எம்கேஐ ரகம் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் கழகமும் இணைந்து உருவாகியது இந்த விமானம். இதன் வான் சட்டம் (airframe) சு 27 இன் வான் சட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும், இதன் வான் பயண மின்னணுவியல் (avionics) சம்பந்தமான பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இது சைனாவின் சு 30 எம்கேகே, மலேசியாவின் சு 30 எம்கேஎம் ஆகியவற்றை விட அதிசிறந்ததாகும். இதன் பாகங்கள் அனைத்தும் இந்தியா, இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டவை.

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சு-30_எம்கேஐ&oldid=1357027" இருந்து மீள்விக்கப்பட்டது