சு-27
| சு 27 | |
|---|---|
| வகை | பல்வகை தாக்குதல் வானூர்தி |
| தயாரிப்பாளர் | சுகோய் நிறுவனம் |
| வடிவமைப்பு | சுகோய் நிறுவனம் |
| வெள்ளோட்டம் | 20 மே 1977 |
| அறிமுகப்படுத்தியது | டிசம்பர் 1984 |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர் | ரஷ்ய வான்படை, யுக்ரெய்னிய வான்படை, சீன வான்படை |
| தயாரிப்பு | 1984–present |
| எண்ணிக்கை | 680 |
| அலகின் செலவு | US$30 மில்லியன் |
| வேறுபாடுகள் | சுகோய் சு-30, சுகோய் சு-33, சுகோய் சு-34, சுகோய் சு-35, சுகோய் சு-37, செங்யாங் ஜே-11 |
சு 27 என்பது ஒற்றை இருக்கை கொண்ட ஒலியை விட வேகமாகச் செல்லும் சண்டை விமானமாகும். இது சோவியத் வான்படைக்காக சுகோய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நான்காம் தலைமுறை விமானங்களுக்குப் போட்டியாக சோவியத் ஒன்றியத்தால் களமிறக்கப்பட்டதாகும். சு-27 ஆனது முற்றிலும் வான் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்பட்டாலும், எல்லாவகையான தாக்குதலுக்கும் ஏற்றதாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் எப்-15 ஈகிள் விமானத்திற்கு இணையானதாகும்.
இதை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு விமானங்கள் தயாரிக்கப்பட்டன. சு-30 என்பது இரட்டை இருக்கை கொண்ட பல் நோக்கு தாக்குதல் விமானமாகும். சு-33 என்பது கடற்படைக்காக இடைமறித்துத் தாக்கும் வகையில் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்து இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும். மேலும் அருகருகே இருக்கைகளைக் கொண்ட சு-34 என்னும் தரைத்தாக்குதல் விமானத்தையும், சு-35 என்னும் மிகச்சிறிந்த தாக்குதல் விமானமும் தயாரிக்கப்பட்டன.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் சுகோய் சு 27 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Su-27SК Sukhoi
- Su-27 page on knaapo.ru
- Russkiye Vityazi (Russian Knights) Acrobatic Team
- Su-27SК Russia Military Analysis
- Su-27 page GlobalSecurity.org
- Sukhoi Flankers - The Shifting Balance of Regional Air Power
- Asia's Advanced Flankers
- The Su-27SKM
- Su-27 free walkaround (37 shots)
- Flanker Portrait Digital Military Art
- Su-27UB walkaround photos