சுவேதாம்பரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுவேதம்பரர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுவேதாம்பரர் என்பது சமண சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்று. மற்றொரு பிரிவு திகம்பரர் எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான திகம்பரர் என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும். எனவே இப்பிரிவை சேர்ந்த துறவிகள் உடை அணிவர்.