சுவாஹிலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவாஹிலி
கிஸ்வாஹிலி
 நாடுகள்: தான்ஸானியா, கெனியா, உகண்டா, ருவாண்டா, புருண்டி, கொங்கோ (DRC), சோமாலியா, கொமோரஸ் தீவுகள், மொஸாம்பிக்,(மயோட்டே உட்பட)
 பேசுபவர்கள்:
மொழிக் குடும்பம்: நைகர்-கொங்கோ
 அத்லாந்திக்-கொங்கோ
  வோல்டா-கொங்கோ
   பெனு-கொங்கோ
    பாண்டோயிட்
     தெற்கு
      Narrow Bantu
       மத்திய
        G
         சுவாஹிலி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கெனியா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி தான்ஸானியா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி உகண்டா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஆபிரிக்க யூனியன் (AU)
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: sw
ISO 639-2: swa
ISO/FDIS 639-3: பலவாறு:
swa — சுவாஹிலி (பொது)
swc — கொங்கோ சுவாஹிலி
swh — சுவாஹிலி (சிறப்பு) 
சுவாஹிலி பேசுவோர் வாழும் பகுதிகள். 


கிஸ்வாஹிலி என்றும் அழைக்கப்படுகின்ற சுவாஹிலி மொழி ஒரு பாண்டு மொழியாகும். கீழ்-சஹாரா ஆபிரிக்காவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழி இதுவாகும். இப் பகுதியின் 80 மில்லியன் மக்கள்தொகையில் சுவாஹிலியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5-10 மில்லியன் வரையே இருப்பினும், தென்கிழக்கு ஆபிரிக்காவின் முக்கியமான மொழியாக இது உள்ளது.

சுவாஹிலி, சுவாஹிலி மக்களின் (அல்லது வாஸ்வாஹிலி) தாய்மொழியாகும். இவர்கள் ஆபிரிக்காவின் இந்துமாக்கடல் கரையோரத்தில் தெற்குச் சோமாலியா தொடக்கம் மொசாம்பிக் - தான்சானியா எல்லைப்பகுதி வரையுள்ள பல பெரிய நிலப்பகுதிகளில் வாழ்கிறார்கள். கிழக்காபிரிக்காவின் பெரும்பகுதியினதும் கொங்கோ ஜனநாயகக் குடியரசினதும் முக்கிய மொழியாகிய இம் மொழியே ஆபிரிக்க யூனியனின் அலுவல் மொழியாக உள்ள ஒரே ஆபிரிக்க மொழியாகும். சுவாஹிலி உலகின் பல முன்னணிப் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி), வாய்ஸ் ஒப் அமெரிக்கா, சின்ஹுவா (Xinhua) போன்ற அனைத்துலக ஊடகங்களும் சுவாஹிலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்