சுவாமி சிவானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுவாமி சிவானந்தர்: ரிசிகேசத்தில் வாழ்ந்த ஒரு இந்து சமய அத்வைத வேதாந்தம் குரு ஆவார். அவர் 1887-ம் வருடம் செப்டம்பர் 8-ம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்து காட்டிய வள்ளல். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர்.

அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society (DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.

இந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. சுவாமி சிவானந்தர் நிறுவிய தெயவ நெறி கழகம், சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து செய்து வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

[தெய்வ நெறி கழகம் http://www.sivanandaonline.org/]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_சிவானந்தர்&oldid=1636350" இருந்து மீள்விக்கப்பட்டது