சுவாமி சகஜானந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி சகஜானந்தா (Swami Sahajananda) (பி ஜனவரி 27 1890 _ இ மே 1 1959) இவர் ஓரு ஆன்மிகவாதியும் சமூக சேவகரும் தமிழக அரசியல்வாதியும் ஆவார் .[1] 1926-32, 1936_47 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமேலவை நியமன உறுப்பினராகவும், 1947, 1952, 1957 சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.[2] 1890 ஜனவரி 27ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுக்காவில் உள்ள மேல்புதுப்பாக்கம் எனும் ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். திருநாளைப்போவார் (எ ) நந்தனார் பெயரில் மடமும் மற்றும் கல்விசாலையும் ஏற்படுத்தி பெரும் கல்விப்புரட்சி செய்த மகான். 1936-1959 தொடர்ந்து 34 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உரிமைக்குரல் கொடுத்த மாமனிதர்

பல லட்சக்கணக்காக பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை அண்ணலைச் சாரும். சுவாமி அவர்களின் தியாகத்தையும், கல்வி பணியின் சிறப்பையும் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு, சுவாமி சகஜானந்தர் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக மார்ச்-23ஆம் நாள் 2020 இல் தமிழக அரசு விடுமுறை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_சகஜானந்தா&oldid=3680209" இலிருந்து மீள்விக்கப்பட்டது