சுவாங்சீ (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாங்சீ (நூல்) என்பது ஒரு சீன மெய்யியல் நூல். இது தாவோயிசத்தின் இரு முக்கிய மூலங்களின் ஒன்று, மற்றையது லா ஓசியின் Tao Te Ching ஆகும். இந்த நூல் கிமு 350 - 300 காலப் பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் பெரும் பகுதியை சுவாங் சீ எழுதினார். இந்த நூலுக்கு அறுபது முக்கிய உரை நூல்கள் உள்ளன. சீன மெய்யியலில் அதிகம் உரை எழுதப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்றாகும்.