சுலவேசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுலவேசி (Sulawesi) இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. போர்னியோ, ஜாவா, மற்றும் சுமாத்திராவுடன் பெரும் சுண்டா தீவுகளில் ஒன்று. இத்தீவு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் சுலவேசியில் மிகப்பெரிய நகரம் மகசார். 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இத்தீவில் ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.