சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது (Golden Pen of Freedom Award) என்பது செய்தித்தாட்டுறையின் சுதந்திரத்திற்கும், மேம்பாட்டுக்கும், அதன் பாதுகாப்புக்கும் தனித்துவமான பங்களிப்புகளை வழங்கிய தனி நபர்கள், அமைப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு உலகளாவிய விருதாகும். இவ்விருது உலகச் செய்தித்தாள் நிறுவனத்தினால் 1961 முதல் வழங்கப்பட்டு வருகின்றது. விருது பெற்றவர்களின் தனிச்சிறப்பு என்பது திடமனம், அர்ப்பணிப்பு, சிறை வாழ்க்கை, உடல் சார்ந்த துன்புறுத்தல்கள், தணிக்கை, தலைமறைவு வாழ்க்கை, படுகொலை என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

விருது பெற்றோர்
ஆண்டு விருது பெற்றவர் நாடு
1961 அகமெது எமின் யல்மன் துருக்கி
1963 செயின் வின் பர்மா
1964 கேப்ரியல் மக்காசோ கொங்கோ
1965 எஸ்மண்ட் விக்கிரமசிங்க இலங்கை
1966 ஜூல்ஸ் டுபோய் ஐக்கிய அமெரிக்கா
1967 மொக்டார் லூபிசு இந்தோனேசியா
1968 கிறிஸ்தோசு லம்பிராக்கிசு கிரேக்கம்
1969 செக்கொசிலவாக்கிய ஊடகம் செக்கோசிலோவாக்கியா
1970 அல்பேர்ட்டோ கைன்சா பாஸ் அர்ஜெண்டினா
1972 ஹுபெர்ட் பீவ்-மெரி பிரான்சு
1973 அன்டன் பெட்ஸ் செருமனி
1974 ஜூலியோ டி மெஸ்க்கிட்டா நேட்டோ பிரேசில்
1975 சங்-மன் கிம் தென் கொரியா
1976 ரவுல் ரீகோ போர்த்துக்கல்
1977 ராபர்ட் ஹை லில்லி வட அயர்லாந்து
1978 டொனால்ட் வுட்ஸ், பெர்சி கோபோசா தென்னாப்பிரிக்கா
1979 கிளாடி பெல்லங்கர் பிரான்சு
1980 ஜகோபோ டைமர்மேன் அர்ஜென்டினா
1981 ஜோசு சேவியர் உரங்கா ஸ்பெயின்
1982 ஜோகின் கமோரோ பரியோசு நிக்கரகுவா
1985 ஜோகின் ரோசசு பிலிப்பைன்சு
1986 அந்தோணி ஹியர்டு தென்னாப்பிரிக்கா
1987 ஜுவான் பப்லோ கர்டெனாஸ் சிலி
1988 நஜி அல்-அலி பாலஸ்தீனிய பகுதிகள்
1989 செர்ஜெய் கிரிகோரியண்ட்சு சோவியத் யூனியன்
1990 லூயிசு கபிரியேல் கனோ கொலம்பியா
1991 கிதோபு இமன்யரா கென்யா
1992 தை கிங் சீனா
1993 பியசு ந்ஜவே கேமரூன்
1994 ஒமர் பெதொவுசெட் அல்ஜீரியா
1995 கவோ யூ சீனா
1996 யிண்டரிமோ ரெசுடானொ டையசு கியூபா
1997 'னாசா போர்பா, ஃபெரல் ட்ரிபூன், ஆசுலோபொடெஞ்சே யுகோசிலேவிய, க்ரோதிய, பொஸ்னியா-ஹெர்சிகோவின கூட்டாட்சிக் குடியரசு
1998 தொஅன் வியட் ஹோட் வியட்நாம்
1999 பரஜ் சர்கோஹி ஈரான்
2000 னிஜார் நயூப் சிரியா
2001 வின் டின், சன் சன் ந்வே பர்மா
2002 கியோப்பிரி ந்யரோதா ஜிம்பாப்வே
2003 பெலாருசிய பத்திரிக்கையாளர் சங்கம் பெலாருஸ்
2004 ருஸ்லன் சலிபோவ் உஸ்பெகிஸ்த்தான்
2005 மகுஜப் மொகமது சலி சூடான்
2006 அக்பர் கஞ்சி ஈரான்
2007 ஷீ டாவோ சீனா
2008 லீ சாங்கிங் சீனா
2009 னஜம் சேதி பாகிஸ்தான்
2010 அகமது செய்தபதி ஈரான்
2011 தவித் இசாக் எரித்ரியா/ஸ்வீடன்
2012 அனபெல் எர்னாண்டசு மெக்ஸிகோ

வெளி இணைப்புகள்[தொகு]