சுகோய் எஸ்.யு-27

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சு 27
Su-27 low pass.jpg
வகை பல்வகை தாக்குதல் வானூர்தி
தயாரிப்பாளர் சுகோய் நிறுவனம்
வடிவமைப்பு சுகோய் நிறுவனம்
வெள்ளோட்டம் 20 மே 1977
அறிமுகப்படுத்தியது டிசம்பர் 1984
நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயனாளர் ரஷ்ய வான்படை, யுக்ரெய்னிய வான்படை, சீன வான்படை
தயாரிப்பு 1984–present
எண்ணிக்கை 680
அலகின் செலவு US$30 மில்லியன்
வேறுபாடுகள் சுகோய் சு-30, சுகோய் சு-33, சுகோய் சு-34, சுகோய் சு-35, சுகோய் சு-37, செங்யாங் ஜே-11

சுகோய் எஸ்.யு-27 என்பது ஒற்றை இருக்கை கொண்ட ஒலியை விட வேகமாகச் செல்லும் சண்டை விமானமாகும். இது சோவியத் வான்படைக்காக சுகோய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நான்காம் தலைமுறை விமானங்களுக்குப் போட்டியாக சோவியத் ஒன்றியத்தால் களமிறக்கப்பட்டதாகும். சு-27 ஆனது முற்றிலும் வான் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்பட்டாலும், எல்லாவகையான தாக்குதலுக்கும் ஏற்றதாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் எப்-15 ஈகிள் விமானத்திற்கு இணையானதாகும்.

இதை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு விமானங்கள் தயாரிக்கப்பட்டன. சு-30 என்பது இரட்டை இருக்கை கொண்ட பல் நோக்கு தாக்குதல் விமானமாகும். சு-33 என்பது கடற்படைக்காக இடைமறித்துத் தாக்கும் வகையில் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்து இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும். மேலும் அருகருகே இருக்கைகளைக் கொண்ட சு-34 என்னும் தரைத்தாக்குதல் விமானத்தையும், சு-35 என்னும் மிகச்சிறிந்த தாக்குதல் விமானமும் தயாரிக்கப்பட்டன.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்_எஸ்.யு-27&oldid=1479661" இருந்து மீள்விக்கப்பட்டது