சீர்காழி கோவிந்தராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 - மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.

பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்பு [தொகு]

பெயர் :சி.கோவிந்தராசன்

பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.

பெற்றோர்:சிவசிதம்பரம்,அவையாம்பாள்

ஆரம்ப கல்வி:வாணிவிலாஸ் பாடசாலை,சீர்காழி

இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில:

  • தியானமே எனது -தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
  • வதனமே சந்திர பிம்பமோ-தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
  • செந்தாமரை முகமே-பி.யூ.சின்னப்பா பாடிய பாடல்
  • கோடையிலே இளைப்பாறி-எல்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல்

இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா,பாய்ஸ் கம்பெனி

இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி

இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்:இசைமணி,சங்கித வித்வான்

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்:1953 இல் பொன்வயல் என்வற படத்துக்காக சிரிப்புதான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார்,திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

பிடித்த ராகங்கள்:லதாங்கி,கல்யாணி,சங்கராபரணம்

சிவசிதம்பரம், அவையாம்பாள் ஆகியோருக்கு சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் பயின்றார்.

இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா,பாய்ஸ் கம்பெனி

இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி

இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்:இசைமணி, சங்கீத வித்வான்

திரைப்படப் பாடகர் [தொகு]

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில [தொகு]

  • பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
  • அமுதும் தேனும் எதற்கு - படம்:தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை :கே.வி.மகாதேவன்
  • மாட்டுக்கார வேலா - படம்:வண்ணக்கிளி,இசை :கே.வி.மகாதேவன்
  • வில் எங்கே கணை இங்கே - படம்:மாலையிட்ட மங்கை,இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்,இராமமூர்த்தி
  • வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
  • கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
  • மலையே என் நிலையே - வணங்காமுடி ,இசை :ஜி.இராமநாதன்
  • ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன்,இசை :ஜி.இராமநாதன்
  • பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில [தொகு]

  • பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
  • மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
  • காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
  • ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு!)

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் [தொகு]

சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கானஅனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.

  • நிலவோடு வான்முகில்,இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
  • எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
  • உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
  • வண்டு ஆடாத சோலையில் ,ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
  • சிரிப்பது சிலபேர் ,யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
  • ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்)ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
  • யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
  • ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)

அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்த பாடல்கள் [தொகு]

  • ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)
  • எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960)பாரதியார் பாடல் ,இசை:கே.வி.மகாதேவன்
  • ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்)
  • கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து)
  • நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966)
  • பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969)
  • கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962)
  • கண்ணன் வந்தான் (ராமு)

பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள் [தொகு]

  • கண்ணன் வந்தான் (படம் ராமு)(உடன் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன்)
  • தேவன் வந்தான் (படம் குழந்தைக்காக) (உடன் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன் மற்றும் பி.பி.ஸ்ரீனிவாஸ்)
  • வெள்ளிப் பனிமலையின் (படம் கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர் திருச்சி லோகநாதன்)
  • இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்)
  • ஆயிரம் கரங்கள் நீட்டி (படம் கர்ணன்) (உடன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்)

விருதுகள் [தொகு]

இசைப்பேரறிஞர் விருது, 1984

வெளியிணைப்பு [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீர்காழி_கோவிந்தராஜன்&oldid=1384817" இருந்து மீள்விக்கப்பட்டது