சீராக்கத்தக்க கண்ணிமுடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீராக்கத்தக்க கண்ணிமுடிச்சு
பெயர்கள்சீராக்கத்தக்க கண்ணிமுடிச்சு, கூடாரக் கண்ணி முடிச்சு, Rigger's Hitch, Midshipman's Hitch, Tent-line hitch, Tent hitch
வகைகண்ணி
தொடர்புஉருட்டு முடிச்சு, இரண்டு அரைக் கண்ணி முடிச்சு, சுமையுந்துக் கண்ணிமுடிச்சு, Adjustable grip hitch
ABoK
  1. 62, #1027, #1230, #1729, #1730, #1799, #1800, #1855, #1856, #1857, #1993

சீராக்கத்தக்க கண்ணிமுடிச்சு என்பது ஒரு தடத்தின் அளவைக் கூட்டிக் குறைக்கக்கூடியதாக அமைந்த ஒரு தட முடிச்சு ஆகும். இது இழுவை நிலையிலுள்ள ஒரு கயிற்றில் பயன்படுத்தக்கூடியது. ஒரு பொருளைச் சுற்றி எடுத்தபின் கயிற்றின் நிலைப்பகுதியில் செயல்முனையினால் உருட்டுக் கண்ணிமுடிச்சு ஒன்று முடியப்படும். தடத்தின் அளவைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் கயிற்றின் இழுவை பேணப்படுகின்றது.

கூடாரங்கள் அமைக்கும்போது கூடாரக் கயிற்றை இழுத்துக் கட்டுதல், மரவியலாளர்கள் மரங்களில் ஏறுதல், வ்ண்டிகளில் சுமைகளை ஏற்றிக் கட்டுதல் போன்றவற்றுக்கு இம் முடிச்சுப் பயன்படுகின்றது. பல சிறப்புக்களைக் கொண்ட இம் முடிச்சு, ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்ப்பது தொடர்பான இரண்டாவது பயணத்தில் விண்வெளி வீரர்கள் இதனைப் பயன்படுத்தினர்.

முடியும் முறை[தொகு]

#1855[தொகு]

  1. 1735 ஆம் எண் கொண்ட உருட்டுக் கண்ணிமுடிச்சை அடிப்படையாகக் கொண்ட இம் முடிச்சே பிற வேறுபாடுகளிலும் கூடிய பாதுகாப்பானது ஆகும்.

#1856[தொகு]

  1. 1734 ஆம் எண்கொண்ட முடிச்சை அடிப்படையாகக் கொண்ட இவ் வேறுபாடு அமெரிக்காவின் சாரணர்களுக்குக் கற்பிக்கப்படுகின்ற ஒரு முடிச்சு ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]